AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Aug 2026 14:49 PM IST

ஆகஸ்ட் 25, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று நீலகிரி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தொடரும் மழை:

ஆகஸ்ட் 26ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காவிரி விவகாரம்.. தமிழகத்திற்கு சாதகமான உத்தரவு.. அடுத்த 15 நாட்களுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க ஆணை!!

ஆகஸ்ட் 28ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி தொடர்ந்து வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விளையாட்டு வினையானது.. தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி.. திருப்பத்தூரில் சோகம்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us