AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி – அமைச்சர் ஆதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

Parandur Airport Project : பரந்தூர் விமான நிலையத்தை சுற்றி மிகப்பெரிய அளவில் நில மோசடி நடந்திருப்பதாகவும், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கட்சியினர் அதிக அளவில் நிலம் வாங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி – அமைச்சர் ஆதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Aug 2026 13:40 PM IST

சென்னை, ஆகஸ்ட் 25 : சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 25, 2026 அன்று எதிர்கட்சிகள் பரந்தூர் விமான நிலையம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்ட நிலத்தை சுர்றி மிகப்பெரிய அளவில் சொத்துக்களை வாங்கி நில மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதற்காக தான் பரந்தூரில் விமான நிலையம் உருவாக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை இது குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி’

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இட நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் சென்னைக்கு அடுத்து புதிய விமான நிலையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. புதிய விமான நிலையத்திற்காக பரந்தூர், பன்னூர், திருப்போருர், படாளம் ஆகிய இடங்களை தேர்வு செய்து முதற்கட்ட ஆய்வுகளை நடத்திய அதிமுக அரசு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இடம் தேர்வு செய்ய மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. திட்ட அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, சென்னையில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்க அனுமதித்தது.

இதனையடுத்து கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் 2 ஓடுபாதைகளுடன் கூடிய புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதது. இதுவரை 1700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் பரந்தூர், ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக கட்சி துவங்கிய முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 24, 2026 நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் 110 விதிகளின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை அடுத்து  பரந்துர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் ட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடினர்.

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கைில்,  பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் செயல் எனவும் அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

Follow Us