AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? – அமைச்சர் விளக்கம்

Thaimaman Gold Ring Scheme: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக கோரப்பட்ட டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்:  2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? – அமைச்சர் விளக்கம்
அமைச்சர் அருண்ராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Aug 2026 08:54 AM IST

சென்னை, ஆகஸ்ட் 25 : சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் ஆகஸ்ட் 24, 2026 நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் பேசிய அவர், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 வரை டெங்குவால் தமிழகத்தில் 25, 585 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 12 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23, 2026 வரை 12, 498 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். மேலும் தங்க மோதிரம் திட்டத்தில் 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகம்

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றம் தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார். மாவட்ட அளவில் சென்னையில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு வராமல் தடுக்க வீடுகளின் அருகே தேங்கும் தண்ணீரை மக்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : “ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு.. தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?”.. முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரங்கள்!!

மேலும் பேசிய அவர், நாங்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சொல்லி, பொதுமக்கள் தெரு நாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் நாய்க் கடிக்கான தடுப்பூசிகள் தயாராக உள்ளன என்றார்.

2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

அப்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2 நிறுவனங்கள் தேர்வானது எப்படி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், ஒரு பைசா ஒப் பந்தத்தின் வாயிலாக, அரசுக்கு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. உரிய விதிமுறைக ளுக்கு உட்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனும் கேள்வி எழுப்பியிருந்தார். தங்க மோதிர திட்டத்தை பொறுத்தவரை 2 விலைகள் உள்ளன. தங்கத்தின் விலை மற்றும் செய்கூலி , போக்குவரத்து செலவு, இன்சூரன்ஸ் என கணக்கிடப்படுகின்றன என்றார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்!

மேலும் பேசிய அவர், இந்த டெண்டர் தங்க விலைக்காக அல்ல. பிற செய்கூலி, பேக்கிங், போக்குவரத்து செலவு ஆகியவற்றுக்காக தான். தங்கத்தை பொறுத்தவரை அன்றைய விலை நிலவரப்படி என்ன விலையோ அதைத் தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். ஜாய் ஆலுக்காஸ் 1 பைசாவுக்கு டெண்டர் கோரியிருந்தார்கள். இதுகுறித்து அந்நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது அதனை நல்ல நோக்கத்துக்காக செய்வதாக தெரிவித்தனர். அவர்கள் சொன்ன தொகைக்கு ஏற்ப வேறு எந்த நிறுவனங்களும் முன் வரவில்லை. கல்யாண் ஜுவல்லர் மட்டும் தான் அதற்கு நிகராக வந்தார்கள். இதனால் 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 கோடி சேமிக்க முடியும். இது நேர்மையான முறையில் டெண்டர் நடந்தததால் தான் நடந்தது என்றார்.

Follow Us