“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” 1 பைசாவுக்கு டெண்டர் எடுத்த பிரபல தங்க நகை நிறுவனம்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி!
Thaimaman Thanga Mothiram Scheme : தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை பிரபல தனியார் தங்க நகை கடை நிறுவனம் வெறும் 1 பைசாவுக்கு டெண்டர் எடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதற்காக, ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர்களை கோரியது. இதில், 4.41 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வது. அந்த மோதிரங்கள் அனைத்தும் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட டெண்டர்களை ஏராளமான நிறுவனங்கள் கோரி இருந்தன. இதில், பிரபல தங்க நகை கடை நிறுவனம் 1 பைசாவுக்கு குறைந்த ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
1 பைசாவுக்கு டெண்டர் எடுத்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம்
இது தொடர்பாக தமிழக அரசு டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில்,




- தங்கத்தின் சந்தை விலையை தவிர்த்து சேதாரம்.
- செய்கூலி.
- பேக்கிங்.
- ஹால்மார்க் முத்திரை.
- காப்பீடு மற்றும் போக்குவரத்து.
என அனைத்து கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வெறும் 1 பைசாவுக்கு மட்டுமே பிரபல தங்க நகை கடையான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. அதாவது, குறைந்த விலை புள்ளி அளித்த நிறுவனமாக ஜாய் ஆலுக்காஸ் முதலில் உள்ளது. இறுதியில் இந்த நிறுவனமே டெண்டர் எடுத்ததாக கூறப்படுகிறது.
தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் நலன் என்ற தலைப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தங்க மோதிரம் வழங்குவதை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற பெயரில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தகுதி என்ன
இதற்காக முதல் கட்டமாக ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜயால் தொடங்கி வைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே, தற்போது அரசு சார்பில் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில்
- தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
- அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!