AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

Weekend Special Buses Operate : வாரவிடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து இயக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Aug 2026 16:30 PM IST

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வார விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 21- ஆம் தேதி) திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 890 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து. . .

இதே போல, நாளை மறுநாள் சனிக்கிழமை ( ஆகஸ்ட் 22- ஆம் தேதி) மேற்கண்ட இடங்களில் இருந்து 820 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே போல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூரு, ஓசூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை 110 சிறப்பு அரசு பேருந்துகளும், இதே போல, நாளை மறுநாள் சனிக்கிழமை 110 சிறப்பு அரசு பேருந்துகளும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது மட்டும் இன்றி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சுமார் 200 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து. . .

சென்னை புறநகர் பகுதியான மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருச்சி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தலா 80 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், ஊர் திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 23- ஆம் தேதி) 465 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

இந்த பேருந்துகளில் நாளை வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்காக சுமார் 18,762 பேரும், நாளை மறுநாள் சனிக்கிழமை பயணம் செய்வதற்காக சுமார் 10,461 பேரும், ஞாயிற்றுக்கிழமை பயணத்துக்காக சுமார் 17,678 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் கூட்டணியில் சிலை தவிர்ப்பதற்காக www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது tnstc செல்போன் செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசுப் பள்ளிகளில் மாநில கல்வி கொள்கை பாடத்திட்டங்கள்… ஆக.31 வரை கருத்து தெரிவிக்கலாம்.. பள்ளிக்கல்வித்துறை!

Follow Us