சுற்றுலா பயணிகளுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ்.. புதிய அவதாரமெடுக்கும் குற்றாலம் மெயின் அருவி.. விரைவில் செம மாஸ் என்ட்ரி..!
Courtallam Main Falls Maintenance Work : தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மெயின் குற்றால அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது சாரல் வீசும் குற்றாலம் தான். அதற்கு ஏற்றவாறு தென்காசி மாவட்டத்தில் ஒன்றல்ல… இரண்டல்ல.. பல்வேறு குற்றால அருவிகள் உள்ளன. இதில், மெயின் அருவி, பழைய அருவி, புலி அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவிகள் உள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் குற்றால சீசன் தொடங்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்துடன் குற்றாலம் கலை கட்டி வரும். தற்போது, எல் நினோ தாக்கத்தின் காரணமாக குற்றால அருவிகளில் சொல்லும் அளவுக்கு பெரிதாக தண்ணீர் விழவில்லை. இருந்தாலும், குற்றால அருவிகளின் மேல் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக போதுமான அளவுக்கு அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
குற்றால மெயின் அருவியில் மீண்டும் பராமரிப்பு பணி
தற்போது, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே விழுகிறது. இதனால், இந்த அருவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பராமரிப்பு பணிகள் சீசன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மெயின் அருவியில் இருந்த பழைய இடித்து அகற்றப்பட்டு சற்று இடைவெளி விட்டு புதிதாக பெரிய வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல, தரை தளத்திலும் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது சீசன் தொடங்கியதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!




வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்படாதவாறு ராட்சத கற்கள் பதிப்பு
தற்போது, அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் விழுகிறது. அந்த தண்ணீரும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, அங்கு தரை தளத்தில் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெள்ளத்தின் போது, பாதிப்படையாத வகையில் ராட்சத கற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெயின் அருவி பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் குளிக்க அனுமதி
இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு மெயின் அருவியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஆர்ச் உள்ளிட்ட இடங்கள் சேதம் அடைந்திருந்தது. அதனை சரி செய்து பராமரிக்கும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஈரோட்டில் பாய்ந்து வந்த கருப்பு நிற கார்.. வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. நூலிழையில் உயிர் தப்பியவர்களின் திக் திக் நிமிடம்!