AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Condemned Congress Party : தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!
காங்கிரஸ் கட்சிக்கு நயினார் கண்டனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Aug 2026 15:19 PM IST

தமிழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இதை கண்டித்து, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை குறித்த நேரத்தில் திறந்து விடுவதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உங்களது கர்நாடக முதல்வர் டி. கே. சிவக்குமார் தற்போது தமிழகத்தில் தான் இருந்து வருகிறார். தமிழகத்தின் குருவை சாகுபடியை திட்டமிட்டு சீரழித்த அவருக்கு எதிராக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் போர் கொடி தூக்கி இருக்க முடியும்.

கர்நாடக முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி

இதில், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து விவசாயிகளும் எங்களுடன் கைகோர்த்து இருப்பார்கள். ஆனால், நாங்கள் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை. அது போன்ற செயல்களில் ஈடுபடவும் மாட்டோம். ஏனென்றால், நாங்கள் பிறந்த இந்த தமிழ் மண் எங்களுக்கு விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை போதித்துள்ளது- கற்பித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருக்கும் கர்நாடக மாநில முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமாருக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொரு தமிழக மக்களின் கடமை ஆகும்.

மேலும் படிக்க: “ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசி”.. அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கொந்தளித்த திமுக உறுப்பினர்கள்!!

முதல்வர் வருகையை அரசியலாக்க விரும்பவில்லை

தமிழக காங்கிரசாரை கூட சந்திக்காமல் அலுவல் ரீதியாக தமிழகம் வந்துவிட்டு திரும்பி செல்லும் கர்நாடக முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமாரின் அரசு பயணத்தை நாங்கள் அரசியலாக விரும்பவில்லை. ஆனால், இந்த அரசியல் நாகரீகம் தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது. இதனால், தானோ என்னமோ, நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு பயணத்துக்கு கருப்பு கொடி காட்டி தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க இணைத்த காங்கிரஸ் கட்சியினரை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதன்கிழமை இரவு தமிழகத்துக்கு வருகை தந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தை ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

Follow Us