AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!

TN Assembly By Election New Alliance Contesting : தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!
சீமான்-கிருஷ்ணசாமி-வேல்முருகன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Aug 2026 19:50 PM IST

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை புதிய கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு புதிய கூட்டணி அமைத்து சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்ட நிலையில் பெரிதளவில் சரித்திரம் படைக்க முடியவில்லை. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

3 துருவங்கள் தலைமையில் புதிய கூட்டணி

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்தித்துள்ளது. குறிப்பாக, தேமுதிக முன்னாள் பொது செயலாளர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் பிரிதளவில் சரித்திரம் படைக்காமல் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: சர்க்கார் பட பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி இருந்திருக்கும்… அமைச்சர் என். ஆனந்த்!

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட 3 கட்சிகள்

சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிவடைந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதேபோல, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்று இருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக களம் கண்டார். ஆனால், அவராலும் தேர்தலில் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.

தவெகவுக்கு மாற்றாக இருக்குமா இந்த கூட்டணி

இதே போல, பல்வேறு தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சியும் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இது மட்டுமின்றி, தவெக தலைவர் விஜய்யின் தாக்கத்தால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளே தேர்தல் போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு மாற்றாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய கூட்டணி அமைய இருப்பதாகவும், இடைத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: தென்காசியில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர்.. கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

Follow Us