விண்ணை முட்டும் அரசி விலை.. தீபாவளிக்கு முன் ஒரு கிலோ ரூ. 100- ஐ தொடும்.. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!
Tamil Nadu Rice Prices Risen : தமிழகத்தில் அனைத்து வகையான அரசிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்குள் ஒரு கிலோ அரிச ரூ. 100 க்கு விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் பருப்பு விலை திடீரென அதிகரித்து வருகிறது. இதில், அரிசி விலை கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை அரிசி விலை ரூ. 300 முதல் ரூ. 600 வரை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக முழுவதும் சன்ன ரக அரிசி உற்பத்தி போதிய அளவில் இல்லாமல் உள்ளது. இந்த ரக நெல் மூட்டைகளை மேற்கு வங்கம், ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி ஆலைகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனை அரிசியாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதில், தமிழகத்துக்கு தேவையான அரிசிகள் போக வெளிநாடுகளுக்கும் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்குள் ஒரு கிலோ அரிசி ரூ.100 க்கு விற்கும்
தற்போது தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலும் கடும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரிசி விலை ஒரு கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் மூட்டைகள் கையிருப்பு குறைந்துள்ள காரணத்தால் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நெருங்கி வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ அரிசி விலை ரூ. 100- க்கு விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது,
மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!




பல்வேறு வகை அரிசியின் விலைகள் விவரம்
- ரூ. 1400- க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி ரூ. 1800- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ரூ. 1600- க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ. 1950- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ரூ. 1800- இல் இருந்து ரூ. 2400- ஆக உயர்ந்துள்ளது.
- 30 கிலோ எடை கொண்ட பாஸ்மதி அரிசி ரூ. 3300- இல் இருந்து ரூ. 3600 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசி ஆலை உரிமையாளர்கள் விடுத்த எச்சரிக்கை
இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதலை அரசு அதிகப்படுத்தி அரிசி ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நெல் மூட்டைகளை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள், போலீசார் துணையுடன் திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரித்து விலையும் கடுமையாக உயரும் என நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மேலும் படிக்க: சுற்றுலா பயணிகளுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ்.. புதிய அவதாரமெடுக்கும் குற்றாலம் மெயின் அருவி.. விரைவில் செம மாஸ் என்ட்ரி..!