சர்க்கார் பட பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி இருந்திருக்கும்… அமைச்சர் என். ஆனந்த்!
Minister Anand Spoke Legislative Assembly: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடித்த சர்க்கார் பட பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். மேலும், பல்வேறு கருத்துக்களை மனம் திறந்து பேசினார் .
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர் என். ஆனந்த் பேசினார். அப்போது, முதல்வர் ஜோசப் விஜய் நடித்த சர்க்கார் பட பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும். சர்க்கார் படம் பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்துள்ளது. சர்க்கார் பேனரை கிழித்ததால் தான் இன்று நீங்கள் அங்கு அமர்ந்து உள்ளீர்கள். சாதி, மதம், பணம் உள்ளிட்ட எதுவும் தேர்தலில் ஈடுபடவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் வந்துள்ளோம். கெட்ட பெயர் எடுக்காமல் அமைச்சர்கள் நடந்து கொள்வோம். எங்களின் சொத்து தமிழக வெற்றி கழகத்தின் தோழர்கள் தான். கட்சி பாகுபாடு இன்றி மக்களுக்கு ஒரு தேவை இருக்கிறது என்றால் அமைச்சர் பெருமக்கள் செய்து தர வேண்டும். எந்த தொகுதியாக இருந்தாலும் கட்சி வேறுபாடு இன்றி நலத்திட்ட உதவிகளை செய்வோம்.
தளபதி ரசிகர் என்ற ஒரே பதவி தான் நீடிக்கிறது
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்எல்ஏ பதவி வந்து போகும். ஆனால், தளபதி ரசிகர் என்ற ஒரே பதவி எப்போதும் என்னுடன் இருக்கும் என்று நான் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். அதன்படி, தான் தற்போது நான் அமைச்சராக உள்ளேன். சினிமாவில் மட்டுமே முதல்வர் நடிப்பார். திரையில் பார்த்த முதல்வரை நீங்கள் சமீப காலமாக நேரில் பார்த்து வருகிறீர்கள். நான் அவருடன் 30 ஆண்டுகளாக உடனிருந்து பார்த்து வருகிறேன். முதல்வர் விஜய்க்கு வெளியே நடிக்க தெரியாது. ஸ்டார், முதல்வர் என்ற நினைப்பு அவருக்கு கிடையாது.
ரூ.2 கோடி வேண்டுமா விஜய் படம் வேண்டுமா
அத்துடன் புகழ்ச்சியும் அவருக்கு பிடிக்காது. மிகவும் நல்ல மனிதர். ரூ. 2 கோடி பணம் வேண்டுமா முதல்வர் விஜயின் படம் வேண்டுமா என்றால் எங்களுக்கு விஜயின் படம் மட்டுமே வேண்டும் பணம் வேண்டாம் என்று தெரிவித்து விடுவோம். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எங்கள் கட்சிக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம் ஆகும். முதல்வர் விஜய்யிடம் பிரபல இயக்குனர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட தொகுதியை கேட்டனர். ஆனால், அந்த தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாகவும், அவர் எனது படத்துக்கு சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி மிகக்கடுமையாக உளைத்துள்ளார்.
பேரவையில் மனம் திறந்து பேசிய அமைச்சர் ஆனந்த்
இதனால், அவருக்குத்தான் அந்த தொகுதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். அதே வேளையில், நீங்களும் எனக்கு தேவை என்று முதல்வர் கூறினார். இதேபோல, தவெக அமைச்சர்கள் உள்ளிட்டோர்கள் குறித்து மனம் திறந்து அமைச்சர் என். ஆனந்த் பேசினார்.