கச்சத்தீவு விவகாரம் – மீனவர்களுக்கு விழிப்புணர்வு தேவை – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
Katchatheevu Issue : இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அக்டோபர் 6, 2026 என்று அறிவுறுத்தியது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
புதுடெல்லி, அக்டோபர் 7 : இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அக்டோபர் 6, 2026 என்று அறிவுறுத்தியது. மேலும் கச்சத்தீவு தொடர்பான வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை 2027 பிப்ரவரிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மீனவர்களுக்கு விழிப்புணர்வு தேவை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இரு ஒப்பந்தங்களை எதிர்த்து ஏ.கே. செல்வராஜ் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இதே விவகாரத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அடங்கிய அமர்வு முன் அக்டோபர் 6, 2026 நேற்று விசாரணைக்கு வந்தன.
இதையும் படிக்க : Tamil Nadu Weather report: இன்று இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை




தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில கூடுதல் தலைமை வழக்கறிஞர், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக குறிப்பிட்டார். மேலும் இந்தப் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதையும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது இரு நாடுகளுக்கு இடையிலான அரசு விவகாரம் என்பதால், இதில் இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று அவர் வாதிட்டார். இலங்கையுடன் இந்தியா நல்லுறவைப் பேணி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யவோ ரத்து செய்யவோ மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மீனவர் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும்தே நேரம் இலங்கையை இணங்கிச் செயல்படுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் திருத்தம் இன்றுவரை செய்யப்படவில்லை. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : கோவையில் காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி தப்பிய சம்பவம் – 9 பேர் அதிரடி கைது
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் குமார், இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதால்கூட மீன்கள் அந்நாட்டுக் கடல் பகுதிக்கு அதிக அளவில் இடம்பெயரக்கூடும். எனவே, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்வதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், மீனவர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து, விசாரணையை ஒத்திவைக்கக் கோரி மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள், அடுத்த விசாரணையை 2027 பிப்ரவரி மாதத்துக்குத் ஒத்தி வைத்தனர்.