கோவையில் காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி தப்பிய சம்பவம் – 9 பேர் அதிரடி கைது
Coimbatore Crime Gang Arrested : கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொடூரக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பலைக் குனியமுத்தூர் போலீஸார் துரத்திப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூர், அக்டோபர் 6 : கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொடூரக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பலைக் குனியமுத்தூர் போலீஸார் துரத்திப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டிப் பணம் மற்றும் நகை பறிப்பில் இந்தக் கும்பல் ஈடுபட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அவர்களைத் பிடிக்க முயன்ற ரோந்து போலீஸார் மீது, காரில் இருந்தபடியே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு சினிமா பாணியில் தப்பிச் சென்றனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகமா.. இறையாண்மை மீதான தாக்குதல். தவெக அரசு மீது கொதித்தெழுந்த சண்முகம்!




தேனியில் எஸ்.எஸ்.ஐ வீட்டில் 100 சவரன் கொள்ளை
கோவையில் இருந்து தப்பிய இக்கும்பல், தேனி மாவட்டத்திற்குச் சென்று அங்கே சிறப்புச் உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்பியது. அங்கு இருந்து தப்பியோடிய குற்றவாளிகள், போலீஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லிக்குச் சென்று தலைமறைவாகினர்.
டெல்லியில் சில மாதங்கள் பதுங்கி இருந்த இந்தக் கும்பல், கடந்த செப்டம்பர், 2026 மாதம் விமானம் மூலமாக மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பியது. தமிழகம் வந்த கையோடு சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நபர் ஒருவரைக் கொடூரமாகப் படுகொலை செய்து விட்டு மீண்டும் கோவைக்குத் தப்பி வந்தனர்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இக்கும்பலைக் பிடிக்கக் கோவை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட குனியமுத்தூர் போலீஸார், கோவையில் பதுங்கி இருந்த கும்பலின் தலைவன் உட்பட 9 பேரைக் கொண்ட கும்பலை வளைத்துப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்தும் கத்திகள், வாகனங்கள் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!
முன்னதாக கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 மாணவர்கள் கைது செய்யபட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்த மாணவர் அமுதன், சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கல்லூரியில் சீனியர் – ஜூனியர் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.