AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகமா.. இறையாண்மை மீதான தாக்குதல். தவெக அரசு மீது கொதித்தெழுந்த சண்முகம்!

Marxist Communist Shanmugam : தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை நிறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சனம் தெரிவித்து உள்ளார் .

தமிழகத்தில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகமா.. இறையாண்மை மீதான தாக்குதல். தவெக அரசு மீது கொதித்தெழுந்த சண்முகம்!
பெ. சண்முகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Oct 2026 20:24 PM IST

சென்னை மாவட்டம், வேளச்சேரியில் தமிழகத்தின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கான இறுதி ஒப்புதலை பல்கலைக்கழக மானிய குழு வழங்கியுள்ளது. இது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் 2020- இன் ஒரு பகுதியாகும். இது உயர் தட்டு நீவுகளாக உயர்கல்வி வளாகங்களை உருவாக்குவதோடு, கல்வி உரிமையை வணிக நலன்களுக்கு அடகு வைப்பதாக அமையும். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதித்து இருக்கும் நிலையில், தமிழகமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் சட்ட திருத்தம் ஒன்றை தவெக அரசு கொண்டு வந்திருந்தது. தற்போது, அடுத்த தாக்குதலாக அந்நிய பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப்பணியிங்கள்

ஒருபுறம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு மறுக்கிறது. 21 பல்கலைக்கழகங்களில் 30 முதல் 50 சதவீதம் வரை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வியின் தரம் பெரும்ப வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அரசுகள் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வெண்சாமரம் வீசுவது வேதனைக்குரியது.

மேலும் படிக்க: Tamilnadu Puducherry By Poll : தமிழகம்- புதுச்சேரி இடைத்தேர்தல்.. விருவிருப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு.. இயந்திரங்களுக்கு “சீல்”

மாணவர்களுக்கு எட்டாத தொலைவில் கல்வி கட்டணம்

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள முதல் ஆண்டு கல்வி கட்டணங்கள் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளது.

  • எம்பிஏ படிப்புக்கு ரூ. 23.13 லட்சம்.
  • ஏஐ படிப்புக்கு ரூ. 17.93 லட்சம்.
  • வணிக வேளாண்மை படிப்புக்கு ரூ. 14.52 லட்சம்.
  • தரவு அறிவியல் படிப்புக்கு ரூ. 14.52 லட்சம் என முதல் கல்வி ஆண்டு கட்டணங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற கட்டணங்களும் உள்ளது.

வரம்பில்லாத கட்டண கொள்ளைக்க வழிவகுக்கும்

அயல்நாட்டு பல்கலைக்கழகங்களின் கட்டணங்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட அதிகாரம் இல்லை என்பதால் வரம்பு இல்லாத கட்டண கொள்ளைக்கு வழிவகுக்கும். எனவே, ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசும், தமிழக அரசும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இட ஒதுக்கீடு மற்றும் தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!

Follow Us