காங்கிரஸுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது.. விஜய் முதுகில் குத்த எவ்வளவு நேரமாகும்… தவெகவை வச்சு செய்த தமிழிசை!
BJP Senior Leader Tamilisai Soundararajan : காங்கிரஸ் கட்சியுடன் யார் சேர்ந்தாலும் உருப்பட மாட்டார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். அவர் யாரை கூறுகிறார் என்பதை விரிவாக பார்க்கலாம் .
காங்கிரஸ் கட்சியுடன் யார் சேர்ந்தாலும் உருப்படவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் எந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் நடைபெற்றுள்ளது. தமிழக பொது தேர்தலின் போது மக்களிடம் இருந்த ஆர்வம் இடைத்தேர்தலில் காணப்படவில்லை. மீண்டும் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. நாங்கள் எல்லாம் ஒரு முறையாவது வெற்றி பெற முடியாதா, மக்களுக்கு சேவை செய்ய முடியாதா என்று நினைக்கும் நிலையில், மக்கள் கொடுத்த வாய்ப்புகளை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அந்த மக்கள் மத்தியில் வாக்கு கேட்பது சரியில்லை. இதனை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஊக்கப்படுத்த கூடாது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு ஆட்டம் கண்டுள்ளது
தனது, 16 வயது பெண் குழந்தையை கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் சென்ற தந்தை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தைகளே பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் நிலவி வருவது வேதனைக்குரிய வகையில் உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் ஆட்டம் கண்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் எஸ். ஐ. ஆர். ( சிறப்பு தீவிர திருத்தம்) விவகாரத்தில் இந்தியா கூட்டணி நடத்தி வருவது வெற்றி பெற முடியாதவர்களின் தோல்வி பேரணி ஆகும்.
மேலும் படிக்க: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!




காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தவர்கள் உருப்படவே முடியாது
காங்கிரஸ் கட்சியும், தமிழக வெற்றி கழகமும் எஸ். ஐ. ஆர். பணிகளுக்கு பின்னர் தான் வெற்றி பெற்றுள்ளது. எஸ். ஐ. ஆர்.க்கு எதிராக போராடி வருபவர்கள் தங்கள் சொந்த வெற்றிக்கு எதிராக போராடுவதற்கு சமம் ஆகும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் யாரும் உருப்படவே முடியாது. இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தினரிடம் கேட்டு பாருங்கள். திமுகவினர் முதுகில் குத்தியவர்கள் ஜோசப் விஜயின் முதுகில் குத்துவதற்கு ரொம்ப நேரம் ஆகாது.
செவிலியர்களை பாடாய்படுத்துவது நல்லதல்ல
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் செய்து விடுவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை இவ்வாறு குண்டு கட்டாக தூக்கி சென்று பாடாய் படுத்துவது நல்லதல்ல என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை அண்மையில் மதச்சார்ப்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிட்டு தவெக தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Tamilnadu Puducherry By Poll : தமிழகம்- புதுச்சேரி இடைத்தேர்தல்.. விருவிருப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு.. இயந்திரங்களுக்கு “சீல்”