Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan

1961ஆம் ஆண்டு நாகர்கோயிலில் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தான் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த அவருக்கு, சிறுவயதில் இருந்தே அரசியலிலும், தமிழ் மொழி மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது தந்தை காங்கிரஸ் கட்சியின் தீவிர கொள்கைவாதியாக இருந்தாலும், அதற்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் தமிழிசை. 1999ஆம் ஆண்டு பாஜக உறுப்பினரான அவர், அடுத்த 15 ஆண்டுகளில் பாஜக மாநில தலைவரானார். பிரதமராக மோடி முதல்முறையாக 2014ஆம் ஆண்டு பதவியேற்றத்தில் முன்பாகவே, மாநில தலைவராக இவர் இருந்தார். 2019ஆம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு தெலங்கானாவின் ஆளுநராக பதவியேற்றார். மேலும், 2021ஆம் ஆண்டு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியும் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு உயர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை, ஒருமுறை கூட சட்டப்பேரவை, மக்களவை என போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலுக்காக தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது, பாஜகவின் மூத்த தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார்.

Read More

கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan : தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இருந்தால், திமுக அரசு கருணையொடு நடந்து கொள்ளவில்லை என்றால் கூட்டணியில் வெளியேறுவோம் என்று கூற முடியும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் முதல்வரை விட தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

போராட்டத்துக்கு போறேனா? தடுத்து நிறுத்தப்பட்ட தமிழிசை!

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க செல்வதாகக் கூறி பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை வீட்டிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து பேசிய தமிழிசை, சுந்தந்திர இந்தியாவில் நான் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், இப்படி வீட்டிலேயே காவல்துறை தடுப்பது ஜனநாயகம் அல்ல என தெரிவித்தார்.

’தமிழ்நாட்டில் பெரியார் புராணம் பேசக் கூடாது’ தமிழிசை பேட்டி

Tamilisai Soundararajan : தமிழகத்தில் பெரியப் புராணம் தான் பேச வேண்டும். பெரியார் புராணம் அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை தரும் நிலையில், அவரை வரவேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி செல்கிறார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.

“உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம்” – இபிஎஸ், தமிழிசை விமர்சனம்

Stalin's "Ungaludan Stalin" Scheme: தமிழக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தல் நோக்கில் கொண்டுவரப்பட்ட விளம்பரத் திட்டம் எனவும், சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாஜக மேலிடம் அழைப்பு.. திடீர் டெல்லி விசிட்.. காரணத்தை சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan Delhi Visit : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.