Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Vijay Speech: கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் ஆக முடியாது.. அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்!

Tamil Nadu's Vijay's TVK Rally: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்றது. தலைவர் விஜய், பாஜக மற்றும் திமுக அரசுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay Speech: கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் ஆக முடியாது.. அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்!
அரசியல் கட்சி தலைவர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Aug 2025 22:08 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vetri Kazhagam) 2வது மாநில மாநாடு மதுரையை அடுத்த பாராபத்தியில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பேசிய (TVK Vijay) தவெக தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசையும் கடுமையாக சாடினார். அதிலும், குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டது. இதனை தொடர்ந்து, தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தநிலையில், யார் யார் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் என்ன கருத்துகளை தெரிவித்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:

விஜய் இன்னும் கொஞ்ச நாள் பேசட்டும். ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் ஏற்கனவே கூறியது போல், கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று. ஆனால், விஜய் மாறும் என்று சொல்கிறார் பார்ப்போம். எல்லா சினிமா காரர்களும் முட்டாள் என்று யாரும் சொல்லவில்லை. விஜய் இதை கற்பனையாக சொல்லி கொண்டு இருக்கிறார். தாமரை மலரும் என்று தான் சொல்கிறோம். தண்ணீருடன் அது ஒட்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. அது ஓட்டுகளாக வரும் என்றுதான் சொல்கிறோம்.

ALSO READ: மு.க.ஸ்டாலின் அங்கிள்… பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா?… – முதல்வர் மீது விஜய் கடும் விமர்சனம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்:

தவெக மாநாட்டில் விஜய் யார் பெயரையாவது குறிப்பிட்டு பேசினாரா..? இல்லை. அப்படி என்றால் அட்ரெஸ் இல்லாத கடிதத்திற்கு நான் எப்படி போட முடியும்..? அவருக்கு எனக்கு தம்பி.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

எல்லோராலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆகி விடமுடியாது. எல்லோராலும் புரட்சி தலைவி ஜெயலலிதா போல் ஆகி விடமுடியாது. இதெல்லாம் ஒரு தேர்தல் யுக்தி, வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். பெயர்களை யுக்திகளாக பயன்படுத்தி வெற்றிகளை பெற முடியாது. அதிமுகவிற்கு மட்டுமே எம்.ஜி.ஆர் சொந்தக்காரர்.

ALSO READ: 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி – த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இப்போது யார் கைகளில் இருக்கிறது என்று கேட்கிறார்கள் பாவம். இதை அறியாமை காரணமாக பேசுவதாகவே பார்க்கிறேன். இதை கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்றால், எப்படி தொண்டர்கள் இருப்பார்கள். யாராலும் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலிதான என யாரும் எடுத்ததும் முதலமைச்சர் ஆகிவிடவில்லை.