கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் ஏசியின் உள்ளே ஐந்து பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவக்கல் பகுதியில் வசிக்கும் மாதவ் பணிக்கர் என்ற டெக்னோபார்க் ஊழியரின் வீட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேலையிலிருந்து வீடு திரும்பிய மாதவ், தனது படுக்கையறையில் உள்ள ஏசியிலிருந்து அசாதாரணமான சத்தம் கேட்டதை கவனித்தார். அதனைச் சரிபார்க்க அருகே சென்றபோது, ஏசியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பின் வால் போன்றது விரைவாக மறைந்ததை அவர் பார்த்துள்ளார்.