Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!

DMK Government Statement On Drug Free Tamil Nadu: திமுக அரசு தெரிவித்த போதையில்லா தமிழகம் என்ற வார்த்தையை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் 2025- ஆம் ஆண்டின் மிகப் பெரிய பொய் என்று கடுமையாக விமர்சித்தார்.

2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!
2025- இன் மிகப்பெரிய பொய் போதையில்லா தமிழகம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 31 Dec 2025 21:53 PM IST

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இல்லை என்றும், தமிழகம் போதையில்லா மாநிலமாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026- ஆம் ஆண்டில் போராட்டம் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். ஏனென்றால், திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் திராவிட பொங்கல் கொண்டாடுவதாக கூறியுள்ளார். இதன் மூலமாக அவர் தமிழின் தனித் தன்மையை மறைக்கிறார். மறுக்கிறார். தமிழ் மாதிரி என்று கூறுவதற்கு பதிலாக திராவிட மாடல் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தவறாக கூறி வருகிறார்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

கீழடி அகழ்வாராய்ச்சியில் 11- ஆவது அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. 5 அமைச்சர்கள் இருந்த போது தமிழுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், காசி தமிழ் சங்கமும் நடத்தப்பட்டு தமிழ் கற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2025- ஆம் ஆண்டின் மிகப் பெரிய பொய் போதை இல்லா தமிழகம் என்று திமுக அரசு கூறி உள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ந்துள்ளது.

மேலும் படிக்க: அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு…9,500 பேர் போட்டியிட தயார்…நேர்காணல் தேதி விரைவில் அறிவிப்பு!

இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் திமுக

தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரிடமும் கஞ்சா புழக்கம் உள்ளது. திருத்தணியில் வெளி மாநில இளைஞர் மீது 17 வயதுடைய 4 சிறுவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதே போல, கோவையில் உணவகத்தில் பணி செய்து கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதும், இந்திய ஒருமைப்பாட்டை குறைக்கும் வகையில் திமுக அரசு வடக்கவர், தெற்கவர் என்று கூறி வருகிறது.

இந்தியா கூட்டணி-திமுக கூட்டணியில் குழப்பம்

தமிழ் மற்றும் தமிழர்களின் அடையாளத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் மாற்றி வருகிறார். இந்தியா கூட்டணியும், திமுக கூட்டணியும் உச்சகட்ட குழப்பத்தில் இருப்பதை மாணிக்கம் தாகூர் எம். பி. வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இந்தியா கூட்டணி, திமுக கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2026- ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆண்டாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் குழப்பத்தில் உள்ளது

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை பார்த்து நாம் கேள்வி கேட்க வேண்டியது இல்லை. ஏனென்றால், தொகுதி மக்களே அவர்களைப் பார்த்து கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களால் தமிழகமே குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!