ஜனநயாகன் படத்துக்கு தடை.. சிபிஐ விசாரணை… பாஜக அழுத்தம் கொடுக்கிறது – அருண்ராஜ் பேச்சால் பரபரப்பு
Arunraj Criticises BJP : மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், ஜனநாயகன் படத்துக்கு தடை மற்றும் சிபிஐ விசாரணை மூலமாக தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தார். இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை, பிப்ரவரி 20 : மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் முனீஸ் பாண்டியின் இல்லத் திருமண விழா பிப்ரவரி 20, 2026 அன்று நடைபெற்றது. இதில், தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெகவிற்கு தவெகவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதால் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்ளகை முடிவு. இதனை எங்கள் கட்சி தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே அறிவித்தார் என்றார்.
‘தேமுதிகவும் தோல்வி அடையும்’
மேலும் பேசிய அவர், கூட்டணி கட்சிகளை எதிர்பார்த்து இதனை அவர் சொல்லவில்லை. சமூக நீதி அடிப்படையில் தவெக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், அவர்களோடு தேமுதிக சேர்ந்து இருப்பதால் திமுகவுடன் தேமுதிகவும் தோல்வி அடையும். கூட்டணி குறித்த முடிவுகளை தவெக தலைவர் விஜய் எடுப்பார். தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இளைஞர்கள் அரசியல் நோக்கி இழுத்தது தவெக தான்.
இதையும் படிக்க : விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..




திமுக வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று தான் தேர்தல் கூட்டணி குழு அமைக்கவுள்ளதாக தெரிவித்தது. ஆனால் அதற்குள் அவசரமாக தேமுகவை உள்ளே கொண்டு வந்தது ஏன்? திமுகவிற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. ஆளும் திமுகவிற்கு கூட்டம் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தவெகவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விதிமுறைகள் என்ற பெயரில் ஆளும் கட்சியினர் செய்கிறார்கள். தவெக தலைவர் விஜய் முதல் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என ஆளும் இரண்டு கட்சிகளை அறிவித்துவிட்டார்.
‘பாஜக அழுத்தம் கொடுக்கிறது’
தற்போது ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு தடை, சிபிஐ விசாரணை என பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுத்துவருகிறது. மதவாத பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தார். தவெகவின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது வெளியிடப்படும் என்றார்.
இதையும் படிக்க : சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!
கடந்த சில மாதங்களாக விஜய் பாஜக மீது விமர்சனங்களை வைக்க மறுக்கிறார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு தடை உட்பட பாஜக மீது முதன்முறையாக தவெக சார்பில் விமர்சனங்களை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.