AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை… திமுக அரசின் திட்டத்தை பட்டியலிட்டார்!

Finance Minister Thangam Thennarasu : தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கி பேசினார். இதில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அறிவித்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள பட்டியலிட்டு உரை ஆற்றினார்.

இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை… திமுக அரசின் திட்டத்தை பட்டியலிட்டார்!
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பதிலுரை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 20 Feb 2026 10:27 AM IST

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரு நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: திமுக அரசு பதவி ஏற்ற 100- ஆவது நாளில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ், முறையாக பயிற்சி பெற்ற 29 அர்ச்சகர் பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அர்ச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வடசென்னை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கான மகளிர் விடியல் பேருந்து, மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவை நாட்டுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

புதுமை பெண் திட்டம்- தோழி விடுதிகள்

பெண் குழந்தைகள் உயர்கல்வியே தொடங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு புதுமைப்பெண் திட்டம், வேலைக்காக வெளியூர் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தோழி விடுதிகள், மகளிர்களுக்கு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பள்ளி குழந்தைகள் பசித்த வயிற்றுடன் பாடம் பற்றி வரும் நிலையை மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.

மேலும் படிக்க: சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!

அன்பு கரங்கள் திட்டம்- ஊட்டச்சத்து திட்டம்

நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் வெகுவான பாராட்டை பெற்றது. பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்து விடும் வகையில் அன்பு கரங்கள் திட்டம். பிறந்து 6 மாதங்களை ஆன குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் ஊட்டச்சத்து திட்டம். மாணவர்களும் உயர் கல்வி பயிலும் வகையில் தமிழ் புதல்வன் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம். மூத்தக்குடி மக்களுக்கான அன்புச்சோலை திட்டம், அவர்களது இல்லம் தேடி ரேஷன் பொருள்களை வழங்குவதற்கான தாயுமானவன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

திமுக அரசின் திட்டங்கள்

இதே போல, மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, முதல்வராக பதவியேற்ற முதல் நாளே கையெழுத்திட்ட மகளிர் விடியல் பயணத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. சுமார் 1.31 கோடி பெண்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தோழி விடுதிகள் போல நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பன உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டியலிட்டு பதில் உரை அளித்தார்.

மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் அரிசி மூட்டை மூலம் நூதன முறைகேடு? கடிவாளம் இட்ட கூட்டுறவு பதிவாளர்!