புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.. “ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்ததாக காட்டம்”..
சாதி, மதம், சமயத்தை தவிர்த்து சம வாய்ப்பு புதிய சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் ஆகும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்கள் நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களது ஒருமித்த கருத்துடையவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று அவர் கூறினார்.
சென்னை, பிப்ரவரி 20: பண்ருட்டி ராமச்சந்திரன் “எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” எனும் புதிய கட்சியை தொடங்கினார். தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர் அறிவித்தார். மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் (89). முன்னாள் அமைச்சரான இவர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர். அதிமுகவில் இருந்து விலகிய பின் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் பயணித்து வந்தார். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் அவர் தனது நிலைப்பாட்டை எடுக்க காலம் தாழ்த்தி வருகிற நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க: “நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..
புதிய கட்சியை தொடங்கினார்:
அதன்படி, சென்னையில் நேற்று ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் தனது கட்சிக்கு “எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்” எனும் பெயரிட்டும், கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொருபுறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது.




ஒருமித்த கருத்துடையவர்களுக்கு ஆதரவு:
இந்த சூழ்நிலையில் நாங்கள் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். சாதி, மதம், சமயத்தை தவிர்த்து சம வாய்ப்பு புதிய சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் ஆகும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்கள் நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களது ஒருமித்த கருத்துடையவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணம் நடத்த உள்ளோம் என்றார்.
மேலும் படிக்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 22 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி:
ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது. அவருடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது. அவர் தகுந்த முடிவை எடுப்பார். வருகிற சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி. விஜய்யின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் தெரிந்துவிடும். எங்களது கட்சியின் தொடக்க விழா காஞ்சீபுரத்தில் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.