AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..

Dmdk joined in dmk alliance: முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். விஜயகாந்த் இருந்தபோதே 2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..
திமுக கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Feb 2026 12:11 PM IST

சென்னை, பிப்ரவரி 19: எதிர்பாராத திருப்பமாக இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா. அதன்படி, 2005ல் தொடங்கப்பட்ட தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், சொன்னபடி தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தராததால் அக்கட்சி மீது பிரேமலதா கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். எனினும், தேமுதிகவை அதிமுக – பாஜக கூட்டணிக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், அவர் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தேமுதிக.. முதல்வருடன் பிரேமலதா சந்திப்பு

நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்:

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நிர்வாகிகள், தொண்டர்கள் விருபத்தின் பெயரில் மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். விஜயகாந்த் இருந்தபோதே 2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பதை குழு அமைத்து முடிவு செய்வோம். அந்த குழு திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அதேபோல், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

தேமுதிக கூட்டணியில் இணைந்தது பெருமகிழ்ச்சி:

அதேபோல், தேமுதிக கூட்டணியில் இணைந்ததற்கு முதல்வர் ஸ்டாலினும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கம்:

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் பிரேமலதா
அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.