AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?

Wi Fi Speed Issue In House | பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளில் வைஃபை மிக மெதுவாக செயல்படுவதாக கூறுகின்றனர். அதற்கு அவர்கள் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை குறை கூறுகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களும் கூட இந்த வைஃபை சிக்கலுக்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம்.

இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jul 2026 14:53 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த உலகமும் இணைய சேவையின் மூலம் ஒரு சிறிய கிராமம் ஆக மாறியுள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவது, நண்பர்கள், உறவினர்கள் உரையாடுவது என அனைத்திற்கு இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய சூழலில் இணைய வசதி இல்லை என்றாலோ அல்லது இணைய வசதி சீராக இல்லை என்றாலோ மிகவும் கடினமாக மாறிவிடும். அப்படி, உங்கள் வீட்டில் இணைய சேவை மிகவும் மெதுவாக உள்ளது என்றால் அதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.

இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்கள் இணைய வசதியை பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

மைக்ரோவேவ் ஓவன்

நாம் வீட்டில் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவன், நமது இணைய சேவை சிக்னல்களை அதிக அளவு பாதிக்க செய்கிறது. பெரும்பாலான ரவுட்டர்கள் ஜிகாஹெடர்ட்ஸ் அலைவரிசையை பயன்படுத்துகின்றன. எதே அலைவரிசையில் தான் ஓவன்களும் இயங்குகின்றன. இந்த நிலையில், பழைய அல்லது பழுதான ஓவன்களை பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேரும் அலைகள் சிக்னலை முழுமையாக தடுத்துவிடும் ஆபத்து உள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை Back Up செய்ய பிரத்யேக கிளவுட்.. விரைவில் அறிமுகம்!

கண்ணாடிகள், டிவி திரைகள்

வீட்டில் உள்ள பெரிய கண்ணாடிகள் மற்றும் டிவி திரைகளும் கூட இணைய சிக்னல்களை பாதிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. கண்ணாடியில் பட்டு ஒளி எப்படி சிதறுகிறதோ, அதேபோல ரேடியோ அலைகளும் பல்வேறு திசைகளில் சிதறும். எனவே ரவுட்டருக்கு நேராக இத்தகைய பொருட்களை வைக்காமல் இருப்பது சீரான இணைய வசதியை பெற உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்திய ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள்!

வீட்டின் தன்மை

சீரான இணைய சேவை பெற வீட்டின் தன்மையும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. அதாவது, செங்கல் மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டப்படும் சுவர்கள் தடிமனாக இருக்கும். அவற்றில் சிக்னல்கள் எளிதில் ஊடுருவ முடியாது. இதுவே மரத்தால் ஆன வீடுகளில் மிக சுலபமாக ஊடுருவும். எனவே ரவுட்டரை வீட்டின்  உயரமான மற்றும் மையப்பகுதியில் வைப்பது அனைத்து அறைகளிலும் சீரான இணைய சேவை பெற வழிவகை செய்யும்.

Follow Us