AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாற்றில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோக்கள்!

Robots Done Surgery For Pig In America | அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிமாக உள்ளது. இந்த நிலையில், மருத்துவ துறையிலும் ரோபோக்கள் கால் பதித்துள்ளன. அதாவது, அமெரிக்காவில் ரோபோக்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Jul 2026 20:22 PM IST

உலகத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி (Technology Development) அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி தொழில்நுட்பத்தின் உச்சமாக உள்ள செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளன. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வதில் ரோபோக்கள் கால்பதித்துள்ளன. ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறுவை சிகிச்சை செய்து அசத்திய ரோபோக்கள்

இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் முதல் முறையாக ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்து உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் அமெரிக்காவில் உள்ள, கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மனித தலையிடல்கள் இல்லாமல் நடக்கவில்லை. மாறாக மருத்துவர்கள் சற்று தூரத்தில் இருந்து ரோபோக்களை இயக்கி இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஐபோன் 17-ஐ விட விலை அதிகம்.. ரூ.1,34,166-க்கு மொபைல் போனை அறிமுகம் செய்த BSNL.. எப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!

கலிஃபோர்னியா பல்கலைக்கழ சோதனை வெற்றி

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான் ரோபோக்களின் ஆதிக்கம் மருத்துவ துறையிலும் தற்போது நுழைந்துள்ளது. எதிர்காலத்தில் மனித தலையீடுகள் இன்றி அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் சோதனையை தான் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்டது.

இதையும் படிங்க : ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு குட் நியூஸ்.. ஏஐ பிசினஸ் ஏஜெண்டை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்!

கலிஃபோர்னியா பல்கலைக்கழம் மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சை சோதனையில், பன்றியின் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இரண்டு ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த சோதனை தற்போது வெற்றி பெற்று உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சிக்கலான பணிகளை மேற்கொண்ட ரோபோக்கள்

இந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் நேரடியாக தலையிடவில்லை. இந்த சோதனையில் அந்த இரண்டு ஸ்டார் ரோபோக்களும் பன்றியின் உடலில் அறுவை சிகிச்சை செய்வதற்கான இடத்தை தீர்மானித்து, தையல் போடுவது உள்ளிட்ட சிக்கலான பணிகளை செய்து முடித்ததாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us