AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்கள் உடன் இந்தியாவில் அறிமுகமானது நத்தின் போன் 4பி ஸ்மார்ட்போன்!

Nothing Phone 4b Smartphone Launched In India | நத்திங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்கள் உடன் இந்தியாவில் அறிமுகமானது நத்தின் போன் 4பி ஸ்மார்ட்போன்!
நத்திங் போன் 4பி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jul 2026 17:12 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் உள்ள மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக நத்திங் (Nothing) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் தனது நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனை (Nothing Phone 4b Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் அறிமுகம்

நத்திங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் பி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போனாக நத்திங் இதனை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : WhatsApp-க்கு செக் வைத்த மத்திய அரசு.. அரட்டை செயலியில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு!

நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆரம்ப விலை ரூ.34,999 ஆக உள்ளது.

இதையும் படிங்க : இந்த நிற கார்கள் அதிக வெப்பத்தை உரிஞ்சும்.. காரின் நிறத்திற்கு பின்னாள் இப்படி ஒரு விஷயமா?

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.38,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளை பயன்படுத்தி பேஸ் மாடல் ஸ்மார்ட்போனை ரூ.34,999-ல் இருந்து வெறும் ரூ.29,999-க்கே வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us