AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

Business AI Agent Feature In WhatsApp | 2026 ஜூன் மாதம் வாட்ஸ்அப்பில் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த அம்சத்தின் கட்டணம் முதல் பயன்பாடு வரை பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jul 2026 16:25 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் பல்வேறு புதிய புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் (Business AI Agent) அம்சத்தில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அம்சத்திற்கான கட்டணம் முதல் பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிசினஸ் வாட்ஸ்அப்பின்,  ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்

2026, ஜூன் மாதம் மெட்டா வாட்ஸ்அப்பில் இந்த பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தை அறிமுகம் செய்தது. தொழில் செய்யும் நபர்கள் இந்த பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் உரையாட முடியும். வாடிக்கையாளர்களுக்கான அப்பாயின்மென்ட், கேள்விகளுக்கான பதில்கள் உள்ளிட்ட சேவைகளை இந்த ஏஐ ஏஜெண்ட் வழங்கும். இந்த நிலையில் தான், இந்த அம்சத்திற்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறையில் மெட்டா மாற்றம் செய்துள்ளது.

இதையும் படிங்க : மழைக்காலத்திலும் ஏசி யூஸ் பண்ணுவீங்களா? இதை கண்டிப்பா கவனிங்க!

டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் – மெட்டா

வாட்ஸ்அப்பில் பிசினஸ் ஏஜெண்ட் அம்சத்தை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களிடம் இருந்து ஆகஸ்ட் 01, 2026 முதல் டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா அறிவித்துள்ளது. தற்போது ஒரு செய்திக்கான கட்டண முறையாக உள்ளது. இதில் இருந்து மாற்றம் பெறும் வகையில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வணிக ரீதியான குறுஞ்செய்திகளுக்கான கட்டணத்தையும் அக்டோபர் 01, 2026 முதல் கொண்டுவர மெட்டா திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏஐ இடம் நீங்கள் வழங்கும் தரவுகள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளதா? .. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

புதிய சிஇஓ மாற்றத்திற்கு பிறகு வந்த அதிரடி மாற்றங்கள்

கிரெட் நிறுவனர் குணால் ஷா வாட்ஸ் அப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us