AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்

ATM Scams : இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஏடிஎம் மோசடிகள் பதிவாகி வருகின்றன. நாளுக்கு நாள் நூதன முறையில் மோசடிக்காரர்கள் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Jun 2026 18:35 PM IST

கார்டு ஸ்லாட் ஓவர்லே மோசடி இந்த மோசடியில், மோசடியில் ஈடுபடுபவர்கள் ஏடிஎம்மின் உண்மையான கார்டு ஸ்லாட்டின் மீது ஒரு போலியான பிளாஸ்டிக் உறையை வைக்கிறார்கள். பயனர் தனது கார்டை நுழைக்கும்போது, ​​ஏடிஎம் வழக்கமாக செயல்படுவது போல் தோன்றும், ஆனால் அந்த பிளாஸ்டிக் உறை கார்டில் உள்ள பெயர், எண் என அனைத்து டேட்டாக்களையும் நகலெடுத்துவிடும்.

இப்படி பெறப்படும் டேட்டா மூலம் போலியான கார்டை உருவாக்கவும், அதன் மூலம் பணம் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஏடிஎம்மை பயன்படுத்துவதற்கு முன், கார்டு ஸ்லாட்டை மெதுவாக இழுத்துப் பாருங்கள். அது தளர்வாகவோ அல்லது கழன்று வருவது போலவோ தெரிந்தால், அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க : ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

புளூடூத் ஸ்கிம்மர் கருவி மூலம் மோசடி

சில சமயங்களில், மோசடிக்காரர்கள் கார்டு ஸ்லாட்டிற்குள் ஒரு சிறிய புளூடூத் ஸ்கிம்மரை பொறுத்துகின்றனர். இந்த புளூடூத் ஸ்கிம்மர் கருவி, கார்டின் டேட்டாவா அருகில் இருக்கும் குற்றவாளிகளுக்கு அனுப்புகிறது. சில சமயங்களில், ஏடிஎம் கீபேடின் மீது மெல்லிய, போலியான உறை ஒட்டப்பட்டிருக்கும். பயனர் பின்னை உள்ளிடும்போது அது அதைப் பதிவு செய்கிறது. கார்டு தகவல் மற்றும் பின் ஆகிய இரண்டையும் மோசடிக்காரர்கள் பெற்றவுடன், அவர்கள் கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுக்க முடியும். ஏடிஎம் பின்னை உள்ளிடும்போது உங்கள் கையால் கீபேடை மறைப்பது சிறந்தது.

ஷோல்டர் சர்ஃபிங் முறையில் மோசடி

மோசடிக்காரர்கள் இப்போது இயந்திரத்தைத் தவிர உங்கள் அசைவுகளையும் கண்காணிக்கிறார்கள். சில சமயங்களில், உங்கள் பின்னைப் பதிவு செய்ய ஏடிஎம்மின் மீதோ அல்லது அருகிலோ ஒரு சிறிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஷோல்டர் சர்ஃபிங் என்பது ஒருவர் உங்களுக்குப் பின்னால் நிற்பது அல்லது மொபைல் போன் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் செயல்களை ரகசியமாகப் பார்ப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது.

எனவே, ஏடிஎம் பின்னை உள்ளிடும்போது உங்கள் கையால் மட்டுமல்லாமல், உங்கள் முழு உடலாலும் கீபேடை மறைக்க முயற்சிக்கவும், மேலும் அருகில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

ஏடிஎம் இயந்திரத்தின் கார்டு ஸ்லாட் பகுதியில் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் துண்டு செருகப்பட்டு, வாடிக்கையாளரின் அட்டை உள்ளேயே சிக்க வைக்கப்படுகிறது. இயந்திரத்தில் கோளாறு என்று நினைத்து வாடிக்கையாளர் அங்கிருந்து சென்றுவிடுவதால், மோசடிக்காரர்கள் அந்த அட்டையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கேஷ் ட்ராப்பிங் எனப்படும் பணத்தைச் சிக்க வைக்கும் மோசடியில், பணம் இயந்திரத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறது. பரிவர்த்தனை முடிந்துவிட்டதாகத் திரையில் காட்டப்பட்டாலும், வாடிக்கையாளருக்குப் பணம் கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் சென்ற பிறகு, இயந்திரத்தில் சிக்கியிருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் எடுத்துவிடுகிறார்கள்.

Follow Us