Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
7 Days Bank Holidays For July 2026 | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) வழங்கப்படும். விரைவில் 2026, ஜூன் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்த விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல்
- ஜுலை 05, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 11, 2026 – மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 12, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 16, 2026 – ரத யாத்ரா என்பதால் மனிப்பூர் மற்றும் ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 19, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 25, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 26, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதம் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
வங்கி விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம்
ஜூலை மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது வங்கி சேவைகளை முடித்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாதே தவிற ஏடிஎம் (ATM – Automated Teller Machine), யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள், வங்கிகளின் செயலிகள் ஆகியவை வழக்கம் போல செயல்படும். எனவே பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி எந்தவித தடையுமின்றி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



