AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஜூன் இறுதிக்குள் தங்கம் விலை மேலும் குறையுமா?.. நிலவரம் என்ன?

Will Gold Price Continue To Reduce | ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை குறையுமா?, தங்கம் விலை நிலவரம் என்னவாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jun 2026 14:51 PM IST
ஈரான் போரால் கடந்த சில நாட்களாக தங்கம் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான், ஜூன் இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 / 5
தமிழ்நாட்டில் ஜூன் 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, ஒரு சவரன் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தான் தங்கம் படிப்படியாக விலை குறைய தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 11, 2026 அன்று குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

2 / 5
அதாவது ஜூன் 11, 2026 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.1,000 சரிவை சந்தித்த நிலையில், சவரனுக்கு ரூ.8,000 சரிவை சந்தித்தது. இதன் காரணமாக தான் ஜூன் மாதத்திலேயே தங்கம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நாளாக அது உள்ளது. அதுவரை தங்கம் ரூ.14,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அன்றைய தினம் ரூ.13,000-க்கு வந்தது.

3 / 5
இந்த நிலையில் தான், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, தங்கம் விலை லேசான உயர்வை சந்தித்தது. ஆனால், ஜூன் 15, 2026-க்கு பிறகு தங்கம் விலை மீண்டும் குறைய தொடங்கியது. அதன் காரணமாக, இன்று (ஜூன் 21, 2026) தங்கம் ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5
ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை 6.21 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 10 நாட்களுக்கு ஒருமுறை என பிரித்து பார்க்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை தலா 3 சதவீதம் தங்கம் சரிவை சந்தித்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த 10 நாட்களில் அதாவது ஜூன் மாதம் முடிவடைவதற்குள்ளாக தங்கள் மேலும் 3 சதவீதம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 / 5
Follow Us