AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!

When Will Petrol, Diesel Price Reduce | ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Jun 2026 15:13 PM IST

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு (Iran and America) இடையே நிலவி வந்த போரில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின், பெட்ரோல் மற்றும் டீசல் (Petrol and Diesel) தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து பலமுறை உயர்த்தப்பட்டது. அதன் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது அன்றாட செலவுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இதன் காரணமாக எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என அவர்கள அவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!

மே 15 முதல் விலை உயர்த்த தொடங்க எண்ணெய் நிறுவனங்கள்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் – அமெரிக்கா இடையேன்  பிப்ரவரி 28, 2026 முதல் சண்டை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடும் தட்டுப்பாடு நிலவியபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமலே வைத்திருந்தன. இந்த நிலையில் தான், மே 15, 2026 முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் – அமைச்சர் பதில்

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. என்வே, இப்போது அவர்கள் அவற்றை தான் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் சரிவில் உள்ள நிலையில், இந்த குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு மையங்களை வந்தடையும்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us