AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!

EPFO Server Would Be Down For Three Days | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது புதிய சேவைகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ இணையதளம் மூன்று நாட்கள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2026 14:39 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த திட்டத்தில், ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக இபிஎஃப்ஓ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான், பெரும்பாலான மக்கள் இதனை தங்களது தனிப்பட்ட மற்றும் முதன்மை சேமிப்பாக வைத்துள்ளனர். இவ்வாறு மிக முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ சர்சர் செயல்படாது

முன்பெல்லாம் இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், விண்ணப்பித்து வங்கி கணக்கிற்கு பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இது சற்று கால தாமதத்தை ஏற்படுத்தும் நிலையில், ஊழியர்கள் ஒருசில நிமிடங்களிலேயே பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக ஏற்பாடுகளை இபிஎஃப்ஓ மேற்கொண்டு வருகிறது. அதாவது, பிஎஃப் பணத்தை யுபிஐ (UPI – Unified Payment Interface) அல்லது ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் ஒருசில நிமிடங்களில் எடுத்துக்கொள்ளும் அம்சம் தான் அது.

இதையும் படிங்க : தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?

சர்வர்களை மேம்படுத்தி வரும் இபிஎஃப்ஓ அமைப்பு

பிஎஃப் பணத்தை மிக விரைவாக எடுக்கக்கூடிய புதிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக இபிஎஃப்ஓ அமைப்பு சர்வர்களை மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், இந்த பணிக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் பிஎஃப் சர்வர்கள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : இந்தியாவில் E85, E100 எரிபொருள் – வாகனங்களின் விலை உயருமா? மைலேஜ் குறையுமா?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எப்போது வேண்டுமானாலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதன் காரணமாக ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்தி எந்த சேவையையும் செய்ய முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே ஊழியர்கள் தங்களுக்கு ஏதேனும் சேவைகளை பெற வேண்டும் என்றால் முன்கூட்டியே முடித்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us