புதிய தொழில் தொடங்கப் போகிறீர்களா? ஆன்லைனில் தொழிலை பதிவு செய்வது எப்படி?
நிறுவனம் தொடங்குவது மட்டும் போதாது. அதற்கு பிறகு ஜிஎஸ்டி தாக்கல் செய்வது, ஆர்ஓசி அறிக்கை, விவரங்களை அப்டேட் செய்வது, வரி குறித்த பதிவுகளை சமர்பிப்பது என சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் முன்பு அல்லாமல் தொழில் தொடங்குவது எளிமையான விஷயமாக மாறி வருகிறது. டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் அரசின் ஆன்லைன் சேவைகள் காரணமாக தற்போது ஒரு சில நாட்களிலேயே ஒரு நிறுவனத்தை பதிவு செய்து தொழில் தொடங்க முடியும். முன்பு ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்பி்கக வேண்டியிருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான செயல்முறைகளை ஆன்லைனிலேயே மேற்கொள்ள முடியும் என்பதால் மக்களின் நேரமும் செலவும் கணிசமாக குறையும்.
இந்த நிலையில் நிறுவனம் தொடங்குவது மட்டும் போதாது. அதற்கு பிறகு ஜிஎஸ்டி தாக்கல் செய்வது, ஆர்ஓசி அறிக்கை, விவரங்களை அப்டேட் செய்வது, வரி குறித்த பதிவுகளை சமர்பிப்பது என சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.
இதையும் படிக்க : யுஏன் ஆக்டிவேட் செய்ய UMANG செயலி மூலம் Face Authentication செய்ய வேண்டும்.. புதிய விதி!




புதிய தொழிலை பதிவு செய்வது எப்படி?
புதிய தொழிலை தொடங்க விரும்புகிறவர்கள் முதலில் அந்த நிறுவனத்தின் வகையை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக அது தனிநபர் நடத்தும் நிறுவனம், பிறருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் நடத்தும் நிறுவனம், பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி, ஒன் பெர்சன் கம்பெனி ஆகிய வகைகளில் உங்கள் நிறுவனம் அடங்குகிறதா என தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர்
அதன் பிறகு மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளம் மூலம் நிறுவனத்தின் பெயர் ஒப்புதல், பான் கார்டு விவரங்கள் டான் விவரங்கள், நிறுவன பதிவு உள்ளிட்ட பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.
ஜிஎஸ்டி ஏன் அவசியம்?
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு மிகவும் முக்கியம். இதன் மூலம் நமது நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும், வரி செலுத்தும் நடைமுறை எளிதாகும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் வணிக தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். ஜிஎஸ்டி பதிவு செய்த பிறகு மாதாந்திர அல்லது காலாண்டு வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
பிரைவேட் லிமிட்டட் நிறுவனங்கள் ரிஜிஸ்டர் ஆஃப் கம்பெனிஸ் அமைப்பில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கை, நிறுவனத்தின் இயக்குநர் விவரங்கள், பங்குதாரர் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அப்படி நாம் மேற்சொன்ன விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
இதையும் படிக்க : ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது!
நிறுவனத்தின் பதிவு செய்வது உள்ளிட்டவை ஆன்லைனில் மாறியிருந்தாலும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இது சவாலானதாக இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வாக பல லீகல் டெக் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நிறுவனத்தை பதிவு செய்தல், ஜிஎஸ்டிக்கு விண்ணப்பிப்பது, சட்ட ஆவணங்களை உருவாக்குவது போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கின்றன. மேலும் தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளும் தொழில்முனைவோருக்கு உதவிகரமாக இருந்து வருகின்றன.