AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் சம்பளம் ரூ. 15,000-ஆ? செலவு போக உங்களால் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்!

Monthly Budget Plan : வருமானத்தை அறிந்து அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும் என்பதை நாம் நீண்ட காலமாகவே கேட்டு வருகிறோம். ரூ. 15,000 சம்பளம் பெறுபவர்கள்கூட கடன் இல்லாமல் வாழ முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jun 2026 21:34 PM IST
எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், மாத இறுதியில் கையில் ஐந்து பைசா கூட மிஞ்சாமல் பலர் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, மாதத்திற்கு ரூ. 15,000 சம்பளம் பெறுபவர்களுக்கு, இன்றைய விலைவாசி உயர்வில் கடன் இல்லாமல் வாழ்வது ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆனால் முறையான திட்டமிடல் இருந்தால், இந்தத் தொகையைக் கொண்டே வசதியாக வாழவும் சேமிக்கவும் முடியும்.

1 / 5
இங்கு '60 - 30 - 10' என்ற மந்திரம் உங்களுக்கு உதவும். முதலில், உங்கள் சம்பளத்தில் 60 சதவீதத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒதுக்குங்கள். இதில் வீட்டு வாடகை, உணவுச் செலவுகள், மின்சாரம், தண்ணீர் போன்ற செலவுகள், பயணச் செலவுகள் போன்றவை அடங்கும். வெளியில் சாப்பிடுவதைக் குறைப்பது பணத்தைச் சேமிக்க உதவும்.

2 / 5
அடுத்த 30 சதவிகிதத்தை, அதாவது சுமார் ரூ. 4,500-ஐ, தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்காக ஒதுக்கலாம். இத்தொகையை ஆடைகள், தனிப்பட்ட பராமரிப்பு, பொழுதுபோக்கு/பயணம், மருத்துவம் அல்லது பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், இதற்காக உங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்திற்கு மேல் செலவிடாதீர்கள்.

3 / 5
வருமானம் குறைவாக இருந்தாலும், சேமிப்பதை நிறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்காக உங்கள் சம்பளத்தில் 10 சதவீதத்தை, அதாவது ரூ. 1,500-ஐ ஒதுக்கலாம். இதை அவசரக்கால நிதியாக வங்கிக் கணக்கில் வைத்திருக்கலாம். அல்லது அஞ்சலகம்அல்லது வங்கி மூலம் மாதந்தோறும் ரூ. 1,000 - 1,500-ஐ தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் சேமிக்கலாம்.

4 / 5
அதேபோல, வருமானம் குறைவாக இருக்கும்போது, ​​தவணை முறையில் பொருட்களை வாங்குவதையும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் செலவுகளைக் குறித்து வையுங்கள். தேவையற்ற இடங்களில் எங்கே பணம் வீணாகிறது என்பதைக் கண்டறிய இது உங்களுக்கு உதவும்.

5 / 5
Follow Us