AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

EPFO : எம்டிஆர் கட்டணத்தை கண்டு அஞ்சும் பொதுமக்கள்.. உண்மையில் சிக்கல் யாருக்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

UPI MDR Charge Explained | இந்தியாவில் யுபிஐ-ல் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ கட்டணம் குறித்தும் அதனால் தங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Oct 2026 11:55 AM IST
இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI - Unified Payment Interface) பண பரிவர்த்தனை முறை தான் பரவலாக இருந்தது. இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக பெரும்பாலான மக்கள் யுபிஐ பண பரிவர்த்தனையை தவிர்த்துவிட்டு மீண்டும் கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் முறைக்கு மாறியுள்ளனர். 

1 / 5
இதற்கு முக்கிய காரணம் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணம் தான். பெரிய வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்தும். இந்த கட்டண முறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது.

2 / 5
இந்த கட்டணத்தை கருத்தில் கொண்டு தான் பெரும்பாலான மக்கள் மீண்டும் கையில் பணத்தை வைத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்ய தொடங்கியதற்கு உண்மையாகவே அவசியம் உள்ளதா, இந்த எம்டிஆர் கட்டணம் உண்மையாகவே பொதுமக்களை பாதிக்குமா என தெரிந்துக்கொள்வது அவசியம் ஆகும். 

3 / 5
பெரும்பாலான பொதுமக்கள் புரிந்துக்கொண்டுள்ளதை போல இந்த எம்டிஆர் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களுக்கானது அல்லட். அது வாடிக்கையாளர்களிடம் இருந்து வணிக நிறுவனங்கள் பெறும் ரூ.2,000-க்கும் மேலான யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கானது ஆகும். இது முற்றிலும் வணிக நிறுவனங்களுக்கே உரியது. 

4 / 5
அதிலும் குறிப்பாக சிறிய வணிக நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் இல்லை. மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டு பெரிய வணிக நிறுவனங்களுக்கு ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு 0.04 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் மறைமுகமாக வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யப்படலாம் என்பதால் பலரும் மீண்டும் யுபிஐ-க்கு மாறி வருகின்றனர்.

5 / 5
Follow Us