பிஎஃப் கணக்கில் நாமினி இணைக்க வேண்டுமா?.. ஸ்மார்ட்போன் மூலம் சுலபமாக மேற்கொள்ளலாம்!
Add Nominee In Your PF Account In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்கள், அந்த கணக்கில் நாமினியை இணைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் மூலம் பிஎஃப் கணக்கில் நாமினியை இணைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பிஎஃப் கணக்கை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றால் அதில் சில தகவல்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. அந்த வகையில், பிஎஃப் கணக்கில் நாமினியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தி இணைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கில் நாமினியை இணைப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் மூலமாகவே மிக சுலபமாக பிஎஃப் கணக்கில் நாமினியை இணைக்கலாம். அது எப்படி என விரிவாக பார்க்கலாம்.
- அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
- அப்போது கேப்ட்சா கோடு கேட்கப்படும். அந்த கோடை வழங்க வேண்டும்.
- பிறகு நீங்கள் இருக்கும் திரையின் மீது மேனேஜ் என்ற டேப் இருக்கும்.
- அதனை கிளிக் செய்து, டிராப் டவுன் மெனுவில் உள்ள இ நாமினேஷன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- நீங்கள் ஏற்கனவே நாமினியை இணைத்திருந்தால் அது தொடர்பான விவரங்கள் திரையில் தோன்றும். இல்லை என்றால், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால் அவற்றை அப்டேட் செய்யும்படி கேட்கும். எனவே அதனை முடிப்பது நல்லது.
- அடுத்த பக்கத்தில் Having Family என்று கேட்கப்படும். உங்களுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர் இருந்தால் அதற்கு ஆம் என பதில் அளிக்கலாம். இல்லாதவர்கள் இல்லை என பதில் அளிக்கலாம்.
- பிறகு நீங்கள் நாமினியாக நியமிக்க போகும் நபரின் பெயர், பிறந்த தேதி, என்ன உறவு முறை, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு – அக்டோபரில் உச்சத்தை தொடும் பணவீக்கம்? நிபுணர்கள் எச்சரிக்கை




மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி நீங்கள் மிக சுலபமாக உங்களது பிஎஃப் கணக்கில் நாமினியை நியமனம் செய்யலாம். ஒருவேளை நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை நியமனம் செய்ய விரும்பினால் ஆட் ரோ அல்லது ஆட் ஃபேமிலி டீடைல்ஸ் என்பதை தேர்வு செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.