இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புதிய வெப்சைட் – அதில் என்ன ஸ்பெஷல்? வெளியான அறிவிப்பு
தற்போதுள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள கேப்ட்சா குறியீட்டால் தாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் முறையிட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஜூலை 15, 2026 அன்று புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 11, 2026 அன்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அதிகாரப்பூர்வ ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள கேப்ட்சா குறியீடு குறித்து மாணவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்னையைத் தீர்க்குமாறு அவர்கள் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரியபோது, ஜூலை 15, 2026 அன்று புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரசின் இந்த முயற்சி ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் பயனளிக்கும். மாணவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், சிறந்த டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை வழங்குவதற்கும் அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.




இதையும் படிக்க : ஈரான் போரால் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?
ரயில்வே அமைச்சரின் உடனடி நடவடிக்கை
#WATCH | On students’ demand, Union Railway Minister announces new IRCTC website to be launched by 15th July pic.twitter.com/fjX6z6vyj1
— ANI (@ANI) June 11, 2026
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த மத்திய ரயில்வே அமைச்சரிடம், இணையதளத்தில், குறிப்பாக ‘கேப்ட்சா’ குறியீட்டை உள்ளிடும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து மாணவர் ஒருவர் தெரிவித்தார். மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த ரயில்வே அமைச்சர், புதிய ஐஆர்சிடிசி இணையதளம் தேவை என்ற அவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, எந்த நேரத்தையும் வீணடிக்காமல் உடனடியாக ஒரு அதிகாரியைத் தொடர்புகொண்டார்.
இது தொடர்பாக பேசிய அவர், 30 நாட்களுக்குள் அந்த இணையதளத்தை உருவாக்க முடியுமா என்று அவர் தொலைபேசி வாயிலாக அதிகாரியிடம் கேட்டார். அதிகாரியிடமிருந்து பதில் கிடைத்ததும், அடுத்த மாதமான ஜூலை 15, 2026 புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
இதையும் படிக்க : கார் விலை உயர்வு – பழைய விலையிலேயே கார் வாங்க வேண்டுமா? மாருதி சுசூகியின் புதிய திட்டம்
இந்த புதிய ஐஆர்சிடிசி இணையதளம் பழைய தளத்தை விட வேகமாகவும், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்து, முன்பதிவு செயல்முறையைச் சீராக்கும். தற்போதுள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாகின் செயல்முறை சிக்கலானதாக இருக்கும். குறிப்பாக தட்கல் போன்று அவசரமாக முன்பதிவு செய்யும்போது பலரும் எரிச்சலடடையும் சூழ்நிலை இருந்து வந்தது.
ரயில்வே பட்ஜெட்டில் பெரும் உயர்வு
ஜெய்ப்பூருக்கு வருகை தந்த அஸ்வினி வைஷ்ணவ், ராஜஸ்தானில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தவும் போக்குவரத்து இணைப்பைச் சீரமைக்கவும் அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். 2014க்கு முன்பு, ராஜஸ்தானின் ரயில்வே பட்ஜெட் சுமார் ரூ. 600 கோடியாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த பட்ஜெட் தொடர்ந்து அதிகரித்து, தற்போது ரூ.10,228 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.