AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸை பராமரிப்பதன் 5 முக்கிய நன்மைகள்

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்கள் மீது வங்கிகள் வழக்கமாக அபராதம் விதிக்கின்றன. 1 ரூபாய் குறைந்தால் கூட, அது பெரிய அபராதத்திற்கு வழிவகுக்கும். ஆனால் குறைந்தபட்ச இருப்பு விதி வங்கிகளுக்கு மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கும் இதில் பெரும் நன்மைகள் உள்ளன.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸை பராமரிப்பதன் 5 முக்கிய நன்மைகள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jun 2026 19:03 PM IST

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வங்கியும் பணப்பரிவர்த்தனைகளுக்கு வெவ்வேறு விதிகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக சேமிப்புக் கணக்குகளில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸ் விதியும் வங்கிகளை பொறுத்து மாறுபடுகிறது. பல வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தேவை என்ற நிபந்தனையை நீக்கிவிட்டன. ஆனால் சில வங்கிகள் அத்தகைய சலுகைகளை வழங்கத் தயாராக இல்லை. உங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே செல்லும்போது, ​​வங்கிகள் எஸ்எம்எஸ், போன் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

வங்கி கணக்கில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸை பராமரிக்காதவர்கள் மீது வங்கிகள் வழக்கமாக அபராதம் விதிக்கின்றன. குறிப்பாக 1 ரூபாய் குறைந்தால் கூட, அது பெரிய அபராதத்திற்கு வழிவகுக்கும். ஆனால் குறைந்தபட்ச இருப்பு விதி வங்கிகளுக்கு மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கும் இதில் பெரும் நன்மைகள் உள்ளன. வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பது உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க : பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!

அபராதங்களைத் தவிர்க்கலாம்

மிக முக்கியமான நன்மை என்னவென்றால், வங்கிகள் விதிக்கும் அபராதங்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்கலாம். கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்குக் குறைவாகப் பணம் வைத்திருப்பதற்காகப் பல வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து 200 முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கின்றன. கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிப்பதன் மூலம், நீங்கள் ஆண்டுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை சேமிக்கலாம். இந்தத் தொகையை பின்னர் வைப்புத்தொகையாக மாற்றிக்கொள்ளலாம்.

செக் புக் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகள் இலவசம்

வங்கிகள் பெரும்பாலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தில் ஏடிஎம் மற்றும் செக் புக் வசதிகளை வழங்குகின்றன. ஆனால் நீங்கள் குறைந்தபட்ச இருப்பைப் பராமரித்தால், இவை அனைத்தையும் இலவசமாகப் பயன்படுத்தலாம். கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரித்தால், மாதந்தோறும் கிடைக்கும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் வரம்பை வங்கிகள் அதிகரிக்கும். கணக்கில் இருப்புத்தொகை குறையும்போது, ​​செக் புக்கின் ஒவ்வொரு தாளுக்கும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் வங்கிகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச இருப்பு தொகயை பராமரித்தால், இவற்றை இலவசமாகப் பெறலாம். இவை தவிர, டிமாண்ட் டிராஃப்ட் எடுப்பதற்கான கட்டணங்களிலும் வங்கி உங்களுக்குச் சலுகைகளை வழங்கும்.

இலவச காப்பீடு

வங்கிகள் வழங்கும் இலவச காப்பீட்டு வசதி குறித்த நன்மை பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரையிலான குறிப்பிட்ட இருப்பு தொகையை பராமரித்தால், உங்களுக்கு இலவச தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் விமான விபத்துக் காப்பீட்டு வசதி கிடைக்கும். இதற்காக நீங்கள் தனியாகக் காப்பீட்டுத் தவணைத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. வங்கிக் கணக்கில் தேவையான இருப்பை நீங்கள் பராமரிக்கும் வரை வங்கி இந்த இலவசக் காப்பீட்டு வசதியை வழங்கும்.

இதையும் படிக்க : ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!

கடன் மற்றும் கிரெடிட் கார்டுகள்

வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, ​​உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை வங்கி நிச்சயமாகக் கருத்தில் கொள்ளும். ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் நல்ல இருப்புத் தொகை இருந்தால், உங்களுக்குப் பெரிய நிதிச் சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், உங்களால் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் வங்கி மதிப்பிடும்.

இது தவிர, உங்களுக்கு சலுகைகளும் கிடைக்கும். நல்ல கடன் தகுதி கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, எந்தவித ஆவணங்களும் இல்லாமலேயே வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்களை வழங்குகின்றன.

பிரீமியம் சேவை

உங்கள் கணக்கில் சராசரியாக ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நீங்கள் பராமரித்தால், வங்கி உங்களை ஒரு பிரீமியம் வாடிக்கையாளராகக் கருதும். அவ்வாறான நிலையில், நீங்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை மேலும், உங்கள் வங்கிச் சேவைகள் தொடர்பான தேவைகளைக் கவனித்துக்கொள்ள ஒரு தனிப்பட்ட மேலாளரை வங்கி நியமிக்கும்.

Follow Us