AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!

Do This To Get Rice With Ration Card | ரேஷன் கார்டில் மானிய விலையில் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். இலவசமாக அரிசி வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், ரேஷன் கார்டில் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 12:45 PM IST

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை (Ration Card) முறை பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் பரவாலாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் கேஒய்சி (KYC – Know Your Customer). தற்போதைய நிலவரப்படி, ரேஷன் அட்டையில் இடன்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கார்டில் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டை தொடர்பாக வெளியாக முக்கிய அறிவிப்பு

ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கான வாழ்வாதாரமாக இந்த ரேஷன் அட்டை திட்டம் விளங்கி வருகிறது. இலவச அரிசி, மானிய விலையிலான உணவு பொருட்களை ஏழைகள் மட்டுமன்றி, வசதி உள்ளவர்களும் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் இலவச அரிசி, மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 3 மாதங்களில் 2வது முறையாக அதிகரிப்பு.. விலை விவரம்!

ரேஷன் கார்டில் கட்டாயமாக்கப்பட்ட கேஒய்சி நடைமுறை

ரேஷன் கார்டில் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை மிக கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் உள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரிப்பார்க்கப்படும். அதன் அடிப்படையில், அந்த குடும்பம் மானிய விலையில் உணவு பொருட்களை பெற தகுதியுள்ளதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்கான பணிகளை தான் தமிழ்நாடு அரசு கடந்த பல மாதங்களாக மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் எப்படி பணம் அனுப்புவது? இதோ எளிய வழி!

கேஒய்சி இல்லை என்றால் அரிசி இல்லை

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களான AAY மற்றும் PHH ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, ஒரு ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு கைரேகை பதிவு செய்து, கேஒய்சி மேற்கொள்ளாத குடும்ப அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us