இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன..வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
Income Tax Filing Rules | தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2026 கடைசி தேதியாக உள்ளது. இந்த நிலையில், அந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும், வருமான வரித்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி (Income Tax) தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதில் மிகவும் முக்கியமானதுதான் தனிநபர் வருமான வரி தாக்கல். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு தான் இந்த தனிநபர் வருமான வரி. 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. அந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் சில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி
வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கும். சில காரணங்களால் இந்த தேதி நீட்டிப்பு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக நீட்டித்து வருமான வரித்துறை (Income Tax Department) அறிவித்தது. அது வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் தான், 2026 ஆம் ஆண்டுக்கு அதேபோல வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : சொமேட்டோ, விவிகிக்கு போட்டியாக களமிறங்கும் ஃபிளிப்கார்ட் – அறிமுகமாகும் புதிய உணவு டெலிவரி செயலி
காலக்கெடுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
ஜூலை 31, 2026-க்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் எந்த பிரிவு 139-ன் கீழ் அடுத்த 48 மாதங்களுக்குள் அப்டேட்டட் வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஆனால், அவ்வாறு வருமான வரி தாக்கல் செய்வதற்கு வழக்கத்தை விட 60 முதல் 70 சதவீதம் கூடுதலாக வரி செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.