AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொமேட்டோ, விவிகிக்கு போட்டியாக களமிறங்கும் ஃபிளிப்கார்ட் – அறிமுகமாகும் புதிய உணவு டெலிவரி செயலி

இந்தியாவில் தற்போது உணவு டெலிவரி தொழிலில் சொமேட்டோ மற்றும் ஸ்விகி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஃபிளிப்கார்ட் இப்போது இந்தத் துறையில் நுழையத் தயாராகி வருகிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் பரவலாக நாடு முழுதவதும் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொமேட்டோ, விவிகிக்கு போட்டியாக களமிறங்கும் ஃபிளிப்கார்ட் – அறிமுகமாகும் புதிய உணவு டெலிவரி செயலி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jul 2026 21:02 PM IST

இந்தியாவில் தற்போது உணவு டெலிவரி தொழிலில் சொமேட்டோ மற்றும் ஸ்விகி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஃபிளிப்கார்ட் இப்போது இந்தத் துறையில் நுழையத் தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை, இத்துறையில் செயல்படும் சொமேட்டோ, ஸ்விகி மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி மார்கெட்டில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் விரைவில் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய உணவு டெலிவரி செயலியை அறிமுகப்படுத்தும் சொமேட்டோ

இது தொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்திருந்தார். அதில் பேசிய அவர், அடுத்த சில வாரங்களில் நாங்கள் உணவு டெலிவரி செய்யும் தொழில் தொடங்கவுள்ளோம். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கனான செயல்முறைகளை மேம்படுத்தி , வாடிக்கையாளர்களை முழுமையாக ஈர்க்கும் வரை செயல்பாடுகளை மேம்படுத்துவோம். அதன் பிறகு, நாங்கள் அதை பெரிய அளவில் விரிவுபடுத்தத் தொடங்குவோம் என்றார்.

இதையும் படிக்க : பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 25% குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

மேலும் பேசிய அவர், ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் பரவலாக நாடு முழுதவதும் அறிமுகப்படுத்தப்படும். இது, ஃபிளிப்கார்ட்டின் விரைவான டெலிவரி சேவையான ‘ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் போன்று செயல்படும். இது ஒரு தனி செயலி கொண்டுவரப்படும், மேலும் இதை நீங்கள் ஃபிளிப்கார்ட் செயலி வழியாகவும் உணவு டெலிவரி சேவையை அணுக முடியும் என்றார். இந்த நிலையில், பிராண்டிங் அல்லது தொடங்கப்படும் நகரம் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, அரசின் ஆதரவு பெற்ற டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்கை ஒருங்கிணைப்பதன் மூலம் ஃபிளிப்கார்ட் தனது உணவு டெலிவரியை சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட்டின் உணவு விநியோக அறிமுகத்தின் குறிப்பிட்ட செயல்முறைகள் குறித்து கிருஷ்ணமூர்த்தி கருத்து தெரிவிக்கவில்லை. இந்தியாவின் உணவு விநியோக சந்தையில் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு மாதிரிகளைச் சோதித்து வரும் நேரத்தில் ஃபிளிப்கார்ட்டின் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்க : EPFO : பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ.. உங்களுக்கு வந்துவிட்டதா?.. உடனே செக் பண்ணுங்க!

மேலும் ராபிடோவும் ‘ஓன்லி’ தளத்தை அறிமுகப்படுத்தியது. ராபிடோ, தனது ‘ஓன்லி’ என்ற தளத்தை சில காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் உத்தி, தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்காகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, குறைந்த விலை, உணவகங்களுக்கான விரிவான டெலிவரி நெட்வொர்க் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மில்லியன் கணக்கான புதிய பயனர்களை இணையதளத்திற்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது.

Follow Us