AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாதம் ரூ.16,000 பென்ஷனாக பெறலாம்.. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

Kisan Vikas Patra Scheme Investment | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றான கேவிபியில் முதலீடு செய்து மாதம் ரூ.16,000 பென்ஷனாக பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதம் ரூ.16,000 பென்ஷனாக பெறலாம்.. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jul 2026 16:37 PM IST

இந்தியாவில் தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை தான், தங்களது ஓய்வுக்கு பிறகு வருமானத்திற்கு என்ன செய்வது என்பது. இந்தியாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், தனியார் ஊழியர்களுக்கு அத்தகைய சலுகை எதுவும் இல்லை. இதன் காரணமாக அவர்கள் பணியில் இருக்கும்போதே தங்களது ஓய்வுக்காக பணத்தை முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

அஞ்சலக கிசான் விகாஸ் பத்ரா திட்டம்

இதற்காக தான் அஞ்சலங்கள் மூலம் அரசு பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக்கு பிறகு வருமானத்தை குறித்து கவலை கொள்ள தேவை இல்லை. இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் கிசான் விகாஸ் பத்ரா (KVP – Kisan Vikas Patra) திட்டட்தில் ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.16,000 வருமானம் பெற எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.. முழு விவரம் இதோ!

மாதம் ரூ.16,000 பென்ஷன் பெறுவது எப்படி?

அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இது ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 7.5 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படும் நிலையில், இதில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.. நோட் பண்ணுங்க!

115 மாதங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்

இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தொடர்ந்து 115 மாதங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு 115 மாதங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் 116 மாதத்தில் இருந்து 9 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை ஒருகுறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். உதாரணமாக 115 மாதங்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் மாதம் ரூ.4,000 பெறலாம்.

அதே தொகையை மேலும்  ஒரு 9 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால் ரூ.8,000 மாதம் பெற முடியும். மேலும் ஒருமுறை இந்த முதலீட்டை நீட்டிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.16,000 பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

Follow Us