SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.. முழு விவரம் இதோ!
Sukanya Samrridhi Yojana Scheme Investment | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களில் ஒன்றான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண் குழந்தைகளில் எதிர்காலத்தை பாதுகாக்க, அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தி வரும் ஒரு அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samrridhi Yojana). இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் சிறுவயதில் இருக்கும்போதே அவர்களது பெயரில் முதலீடு செய்ய தொடங்கலாம். குழந்தைகள் 21 வயதை நிறைவடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து சிறந்த லாபத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பெண் குழந்தைகளில் கல்வி செலவுக்காக அவர்கள் 18 வயதை நிறைவடைந்த பிறகு பகுதி அளவு பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர்கள் இந்த சில தவறுகளை செய்யாமல் இருப்பதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும். அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் – இந்த தவறுகளை செய்யாதீர்கள்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கே தெரியாமல் முதிர்வு காலத்தில் நல்ல ரிட்டன்ஸ் வருவதை தடுக்கும். எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர்கள் ஒருசில தவறுகளை செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்ல ரிட்டன்ஸ் கொடுக்கும்.
இதையும் படிங்க : தினமும் ரூ.67 முதலீடு செய்து ரூ.1.42 லட்சம் பெறலாம்.. அஞ்சல RD திட்டத்தில் இப்படி முதலீடு செய்யுங்க!




முதலீட்டு தேதி
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் 5 ஆம் தேதி முதல், அந்த மாதத்தின் கடைசி நாளுக்கு இடைப்பட்ட கால அளவில் மிகக் குறைந்த அளவு வட்டி கணக்கிடப்படும். எனவே, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன்னரே முதலீட்டு தொகையை செலுத்தினால் அந்த மாதத்திற்கான முறையான வட்டி வழங்கப்படும்.
தாமதமாக கணக்கை தொடங்குவது
பெண் குழந்தைகள் பிறந்தது முதல் 10 வயது வரை மட்டுமே கணக்கு தொடங்க முடியும். எனவே குழந்தை பிறந்த உடனே கணக்கு தொடங்கி முதலீடு செய்ய தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும், அந்த திட்டத்திற்கு வழங்கப்படும் கூட்டு வட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அதிக பலன்களை பெற முடியாமல் போகலாம்.
இதையும் படிங்க : எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம்? காரணம் இதுதான்!
முதலீட்டு வரம்பு
இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பெற்றோர்கள் இதற்கு ஏற்ப முதலீடு செய்வது, திட்டத்தின் முடிவில் சிறந்த பலன்களை பெற உதவியாக இருக்கும்.