தினமும் ரூ.67 முதலீடு செய்து ரூ.1.42 லட்சம் பெறலாம்.. அஞ்சல RD திட்டத்தில் இப்படி முதலீடு செய்யுங்க!
Post Office Recurring Deposit Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம்.
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் ரெக்கரிங் டெபாசிட் (RD – Recurring Deposit) திட்டம். இந்த திட்டம் தொடர் வைப்பு நிதி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்து, திட்டத்தின் முடிவில் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், அஞ்சலக ஆர்டி திட்டத்தில் தினமும் ரூ.67 முதலீடு செய்து ரூ.1.42 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்ட முதலீடு
முதலீடு என்றதுமே பலரும் அதிக தொகையை முதலீடு செய்தால் தான் நல்ல லாபத்தை பெற முடியும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அஞ்சல சேமிப்பு திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.
இதையும் படிங்க : ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்.. மீண்டும் வருகிறது MDR முறை!




தினமும் ரூ.67 முதலீடு செய்து ரூ.1.42 லட்சம் பெறலாம்
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வெறும் ரூ.500 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் அதிக லாபத்தை பெற முடியும். மற்ற திட்டங்களை போல திட்டத்தின் தொடக்கத்தில் முதலீடு செய்யாமல், இந்த திட்டத்தில் மாதம் மாதம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க : Gold : கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா?.. விதிமுறைகள் என்ன?
இந்த அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தினமும் ரூ.67 முதலீடு செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ.2,000 முதலீடு செய்வீர்கள். இந்த திட்டத்திற்கான மொத்த முதிர்வு காலம் 5 ஆண்டுகாள உள்ள நிலையில், 5 ஆண்டுகளுக்கு இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் திட்டத்தின் முடிவில் ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள்.
வட்டி மட்டுமே ரூ.22,732 கிடைக்கும்
இந்த முதலீட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டியாக மட்டுமே ரூ.22,732 கிடைக்கும். அதன்படி, முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.1,42,732 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது திட்டம் தொடர்பான முன்னோட்டம் தான். இதில் வரும் லாப, நஷடங்களுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது.