AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AAY ரேஷன் கார்டு பயனர்களுக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாது?.. புதிய வரைவு மசோதா கூறுவது என்ன?

Antyodaya Anna Yojana Ration Card | இந்தியாவில் ரேஷன் அட்டை திட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான், ரேஷன் கார்டு விதிகள் தொடர்பான புதிய வரைவு மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

AAY ரேஷன் கார்டு பயனர்களுக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாது?.. புதிய வரைவு மசோதா கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Jul 2026 08:04 AM IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது தான் ரேஷன் அட்டை திட்டம் (Ration Card Scheme) . அதாவது வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த ரேஷன் அட்டை திட்டம் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், ரேஷன் கார்டுகள் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசின் புதிய வரைவின் படி, ரேஷன் கார்டுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கான அளவில் முக்கியம் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் அட்டை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய வரைவு

ரேஷன் அட்டை தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய வரைவு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் (AAY –  Antyodaya Anna Yojana) கீழ் ஏழை குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தான் மத்திய அரசு அந்த புதிய வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அரசின் இந்த முக்கிய முடிவு, நாடுக் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : முட்டை விலை உயர்வு.. ஏழைகளின் புரோட்டீன் உணவுக்கு வந்த சோதனை.. ஹோட்டல்களிலும் ஆம்லெட் விலை அதிகரிப்பு!

ஒரு நபருக்கு 7 கிலோ அரிசி – மசோதா கூறுவது என்ன?

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 7 கிலோ என்ற அடிப்படையில் அரிசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஒரு குடும்பத்துக்கான அளவு 35 கிலோவை தாண்ட கூடாது என்ற உச்ச வரம்பையும் நிர்ணயம் செய்துள்ளது.

இதையும் படிங்க : பெண்களுக்கு சிறந்த லாபம் தரும் பிரத்யேக அஞ்சலக திட்டங்கள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இதன் மூலம் ஒரு குடும்பம் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் அந்த குடும்பத்தில் 5-க்கும் குறைவான குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்றால் அவர்களுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us