AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக.. நாடாளுமன்றத்தில் தனிப் பாதை.. தமிழ்நாட்டுப் பகை டெல்லியில் எதிரொலி!

DMK Congress seat change: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விடுத்த அதிரடிக் கோரிக்கையை அடுத்து, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் இருக்கைகள் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி அமைத்ததால், டெல்லியில் காங்கிரஸை முற்றிலுமாக ஓரங்கட்டி திமுக தனது அரசியல் பலத்தைக் காட்டியுள்ளது.

காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக.. நாடாளுமன்றத்தில் தனிப் பாதை.. தமிழ்நாட்டுப் பகை டெல்லியில் எதிரொலி!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Jul 2026 13:44 PM IST

டெல்லி, ஜூலை 18: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தேசிய அரசியலில் தற்போதே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கூட்டணி முறிவின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்களின் அருகில் இருந்து திமுக எம்பிக்களின் இருக்கைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு முறைப்படி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நாடாளுமன்றச் செயலகம் இந்த இடமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மிகப்பெரிய பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!

இருக்கை மாற்றத்தின் பின்னணி என்ன?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உடைந்தது. தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் பிரதான சக்தியாக உருவெடுத்துள்ள முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் புதிய கூட்டணியை அமைத்தது.

கனிமொழியின் அதிரடிக் கடிதம்:

காங்கிரஸின் இந்த திடீர் அரசியல் பல்டி மற்றும் ‘துரோகச் செயல்’ தங்களை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளதாக திமுக தலைமை மற்றும் தொண்டர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். “மாறிவரும் அரசியல் சூழலில், தற்போதைய இருக்கை அமைப்பின்படி நாடாளுமன்றத்தில் காங்கிரஸுடன் இணைந்து அமருவது அரசியல் ரீதியாகப் பொருத்தமாக இருக்காது” என கனிமொழி எம்பி சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

கூட்டணி மாறியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் தங்களுக்கு இருக்கை தேவையில்லை என்றும், எதிர்க்கட்சிகள் வரிசையில் தங்களின் இருக்கைகளை முற்றிலும் மாற்றித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.  இதற்கு முன்பு வரை நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலுமே திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். அவையில் குரல் எழுப்புவது, முக்கிய விவாதங்களின் போது ஆலோசிப்பது என நெருக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.

மாநிலங்களவையில் பவர் காட்டிய திமுக:

கனிமொழியின் கடிதத்தை ஏற்று, தற்போது முதற்கட்டமாக மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் இருக்கைகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலங்களவையில் இருக்கும் திமுகவின் 8 எம்பிக்களும் இனி காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் அமர மாட்டார்கள். அவர்களின் இருக்கைகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மக்களவையிலும் இதேபோன்ற மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டங்களையும் திமுக முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் எந்தவொரு கூட்டுப் போராட்டத்திலோ அல்லது அவைப் புறக்கணிப்பிலோ திமுக எம்பிக்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்குச் செக் வைக்கும் வகையில் திமுக நாடாளுமன்றத்திலேயே தனது பவரை காட்டியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Follow Us