கார், டாக்ஸி, உணவு டெலிவரி போல, இனி 'வாடகைக்கு காதலன்' சேவையும் இந்தியாவில் கவனம் பெற்று வருகிறது. ஜப்பானில் தொடங்கிய இந்த வித்தியாசமான சேவை, தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த சேவையில், விருப்பமான நபரின் சுயவிவரத்தைத் தேர்வு செய்து, மணிநேர அடிப்படையில் அவரை முன்பதிவு செய்யலாம்.