AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக-விற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியாகியுள்ள கரூர் தொகுதியை இடைத்தேர்தலில் மீண்டும் கைப்பற்ற இபிஎஸ் தீவிர வியூகம் வகுத்து வருகிறார்.

தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Jul 2026 13:04 PM IST

சென்னை, ஜூலை 18: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தோல்விகள் மற்றும் அடுத்தகட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இபிஎஸ் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை மற்றும் மதிய வேளையில் கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலை வேளையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

கரூர் ஆலோசனைக் கூட்டத்தின் அதிரடிப் பின்னணி:

அதிமுக கோட்டையாகக் கருதப்பட்ட கரூரில் சமீபத்தில் அக்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஏற்பட்டது. கரூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த மாதம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்:

விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் விலகலைத் தொடர்ந்து, கரூரில் கட்சிக்கு ஏற்பட்ட பலத்த சரிவைச் சரிசெய்ய, புதிய மாவட்டச் செயலாளராக கமலக்கண்ணன் என்பவரை இபிஎஸ் உடனடியாக நியமித்தார். இன்றைய கூட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நகரக் கழகம், பேரூர் கழகம், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என அத்தனை முக்கியப் பொறுப்பாளர்களும் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய சாராம்சம்:

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் கரூர் சட்டமன்றத் தொகுதி காலியாகி, அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதிமுகவின் வசமிருந்த இந்தத் தொகுதியை எப்படியாவது மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதும், தவெக-விற்குச் சென்ற இடத்தை மீண்டும் அண்ணா திமுகவிடம் மீட்டெடுக்க வேண்டும் என்பதும் இபிஎஸ்-ஸின் முதன்மை இலக்காக உள்ளது.

கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் தவெக மற்றும் திமுக போன்ற இதர கட்சிகளுக்கு மாறியுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை உடனடியாகப் புதிய மற்றும் விசுவாசமான தொண்டர்களைக் கொண்டு நிரப்பும்படி இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!

பொதுக்குழு, செயற்குழு ஏற்பாடுகள்:

இந்த ஆண்டு இறுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதற்கான புதிய பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் பணிகளும் முடுக்கப்பட்டுள்ளன. அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அடிமட்ட அளவில் பூத் கமிட்டி பணிகளையும், தேர்தல் பணிகளையும் இப்போதே தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Follow Us