கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் நிலையில், அவரது அருகில் நின்று மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், உடல்நலக்குறைவால் படுக்கையில் இருக்கும் கணவரின் அருகில் மனைவி நின்று ரீல்ஸ் பதிவு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.