AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parliament Monsoon Session: நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டாம்.. எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் பரவலாகக் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parliament Monsoon Session: நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டாம்.. எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் அறிவுறுத்தல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Jul 2026 11:05 AM IST

ஜூலை 17, 2026: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, பேனா கேமரா உள்ளிட்ட நவீன சாதனங்களைப் பயன்படுத்தும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் பாதிக்கப்படாத வகையில் செயல்பட வேண்டும் என மக்களவை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிய கட்டுப்பாடுகள்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் பரவலாகக் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனங்களில் சிலவற்றை தவறான முறையில் பயன்படுத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதுடன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளும் மீறப்பட வாய்ப்புள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற வளாகத்தின் எந்தப் பகுதியிலும், பாதுகாப்பு, உறுப்பினர்களின் தனியுரிமை அல்லது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பாதிக்கும் வகையில் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எம்.பி.க்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 75 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆலோசனை:

பாஜகவின் தேசிய நிர்வாகிகள் குழுவிலும், மத்திய அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 21ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்கால கூட்டத்தொடரில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து முடிவு செய்ய உள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு சார்பில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி.. முடிவுகளை அறிவது எப்படி? இதோ முழு தகவல்!

முக்கிய மசோதாக்கள் குறித்து எதிர்பார்ப்பு:

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படும் சூழலில் அவர்களை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான மசோதாவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகள், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

Follow Us