பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் – ஒருவர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஒடிசாவின் பூரி நகரில் நடைபெற்ற ஜெகன்னாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பலியானதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒடிசாவின் பூரி நகரில் நடைபெற்ற ஜெகன்னாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாமியை தரிசிக்கும் ஆர்வத்தில் பெருமளவிலான பக்தர்கள் கிராண்ட் ரோட் பகுதியில் திடீரெனக் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சுமார் 120 பக்தர்களை மீட்டு, உடனடி சிகிச்சைக்காக பூரி மாவட்ட மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். பக்தர்கள் கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளானதாகத் தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் உடனடியாக சிறப்பு உதவிக் குழுக்களை களமிறக்கியதுடன், நிலைமையைச் சீர்செய்யக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்
ஒடிசாவின் பூரி நகரில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதர் ரத யாத்திரை வியாழக்கிழமை நடைபெற்றது. பக்தர்களின் பெருந்திரள் வருகையால் கிராண்ட் ரோட் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் போன்ற சூழல் உருவானதால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரக்கால மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதுடன், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
உள்ளூர் தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் ஒரு பக்தர் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக மயக்கமடைந்த அவர் உடனடியாக பூரி மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு வந்தடைந்தபோதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த உயிரிழப்பு குறித்து அதிகாரிகளிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சகாவல்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். நெரிசலான பகுதியில் சிக்கியிருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை ‘கிராண்ட் ரோட்’ பகுதியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் ரத யாத்திரையைப் பாதுகாப்பாகத் தரிசிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட சோகம்
VIDEO | Puri, Odisha: A person, who appeared to have fainted, taken for medical treatment as huge number of people gather to attend the annual Jagannath Rath Yatra.
Heavy security arrangements have been put in place to manage the surge in footfall and ensure the smooth conduct… pic.twitter.com/jhf32hhPKo
— Press Trust of India (@PTI_News) July 16, 2026
இதற்கிடையில், பாரம்பரிய முறைப்படி ஜூலை 16, 2026 வியாழக்கிழமையன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை தொடங்கியது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகன்னாதர் கோயிலிலிருந்து குடிச்சா கோயிலுக்குச் செல்லும் இந்த வருடாந்திரத் திருவிழாவைக் காண நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பூரிக்கு வருகை தந்தனர். சங்கு ஒலிகள் ஒலிக்க, முதலில் சுதர்சன சக்கரம் கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, தேவி சுபத்ராவின் தேரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாரம்பரியமான சடங்கின்போது தேவி சுபத்ராவின் திருவுருவச் சிலை தேருக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர், பலபத்ரர் மற்றும் இறுதியாக ஜகன்னாதர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, பக்தர்கள் எழுப்பிய “ஜெய் ஜகன்னாதர்” முழக்கங்களால் ‘கிராண்ட் ரோடு’ (Grand Road) பகுதியே அதிர்ந்தது. இருப்பினும், இம்முறை ரத யாத்திரையின்போது திரண்டிருந்த பெருந்திரளான மக்களால் ஏற்பட்ட நெரிசல், கவலைக்குரிய சூழலை உருவாக்கியது.